Tag Archives: விநாயகர்

நம் சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விரதம் இருக்கும் முறை..!

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் ‘சங்கடஹர சதுர்த்தி” நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள், துரியோதனனை ...

Read More »

விநாயகரின் வெட்டப்பட்ட மனிதத் தலை இருக்கும் குகை இதுதானா?

விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று பொருள், கணபதி என்றால் கணங்களின் அதிபதி என்று பொருள். முழுமுதற்கடவுளாக அனைவராலும் போற்றப்படும் விநாயகருக்கு யானையின் தலை எப்படி வந்தது என்பதை பெரும்பாலான அனைவரும் அறிந்திருப்போம். சிவபெருமானால் வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக நம்பப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள். உத்தரகண்டில் உள்ள புவனேஷ்வரில் உள்ளது பாட்டல் புவனேஸ்வர் எனும் குகை. இந்த குகைக்குள் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 160 மீட்டர் நீளமும் 90 அடி ஆழமும் ...

Read More »

இந்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகுவது உறுதி

இயற்கையிலேயே வெள்ளெருக்கு செடி தெய்வீக சக்திகள் கொண்ட செடியாக ஆன்மிக ரீதியில் கருதப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான மலராக வெள்ளெருக்கு பூ சூட்டி வழிபடப்படுகிறது. எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் கூட மழையில்லாமல் இரவில் பெய்யும் பனியை கொண்டே வளரும் தன்மை கொண்டதாகும். எருக்கஞ்செடி வகையில் வெள்ளெருக்குக்கு ஆன்மிக ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் பல்வேறு சக்திகள் இருப்பதாக கருதப்படுகிறது. வெள்ளெருக்கு நாரை கொண்டு திரிக்கப்படும் திரியில் தீபமேற்றினால் வீட்டிலிருக்கும் ...

Read More »

தானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் – குகை முழுதும் நிலவும் மர்மங்கள்!

இந்தியாவின் பல கோயில்களில் சுயம்புவாக தோன்றிய லிங்க வடிவங்களை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவம் தோன்றி பக்தர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது இந்த அதிசய குகையை பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள ரியாசி மாவட்டத்தில் பெளனி என்ற கிராமத்தில் உள்ளது சிவ் கோரி என்ற குகை. இந்த குகையில் சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கத்தின் மேல் எப்பொழுதும் நீர் சொட்டியபடியே உள்ள அதிசயம் நிகழ்கிறது. இந்த நீர் ...

Read More »