Tag Archives: வராஹி வழிபாடு

வாழ்வையே வளமாக்கும் வராஹி பஞ்சமி வழிபாடு மறக்காதீங்க!

சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன்,பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் தருவதிருக்கட்டும். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை! சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால், அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்! பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்! வாராஹிதேவிக்கு, ...

Read More »