இன்ஜினியர், ரவுடி என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இன்ஜினியரான அருண் விஜய்யும், தன்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். தனது சேமிப்பு அனைத்தையும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதில் முதலீடு செய்கிறார் இவர். யோகி பாபுவுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளை பார்த்து வருகிறார் ரவுடி அருண்விஜய். சீட்டு விளையாட்டில் பணத்தை பறிகொடுக்க, யோகி பாபுவை ஒரு கும்பல் பிடித்து செல்கிறது. யோகி பாபுவை மீட்பதற்காக பணம் சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது ஸ்மிருதி வெங்கட் – அருண் விஜய் இடையே பழக்கம் ஏற்படுகிறது. ...
Read More »