நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்

இந்தியாவில் ஆண்டுக்கு 11,57,294 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (Indian Council Medical Research – ICMR) நடத்திய ஆய்வின்படி 2020 ஆண்டிற்குள், 17.3 லட்சக்கணக்கில் புற்றுநோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை உயரும் எனவும், இந்த நோயால் 8.8 லட்சக்கணக்கில் இறப்பு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. பலவகைகளாக காணப்படும் புற்றுநோயில், மிகக்கொடியதான இரத்தப் புற்றுநோய் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. அந்த இரத்த புற்றுநோயில் ஒருவகையான Leukemia, Acute (விரைவாக வளரக்கூடியது) மற்றும் Chronic (மெதுவாக வளரக்கூடியது) என்று இருவகைப்படும்.

பெரும்பாலும் குழந்தைகளை தாக்கக்கூடிய நோயாக Leukemia உள்ளது. வெள்ளை இரத்த அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்து, நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவிடாமல் பாதிப்படையச் செய்வதே Leukemia. Acute lymphoblastic leukemia என்னும் நோய்தான் அதிகப்படியாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொதுவான புற்றுநோயாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வருடத்திற்கு 25,000 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் சந்தோஷ்…

சென்னையின் தனியார் மருத்துவமனை ஒன்றின் ஹவுஸ்கீப்பிங் பணியாளர் ஹரி கிருஷ்ணன். அவருடைய மனைவி பழனியம்மாள் இல்லத்தரசியாக இருக்கிறார். இவர்களின் 4 வயது மகன் சந்தோஷ், இம்மாதம் (2019, ஜனவரி) 4ம் தேதி மிகவும் சோர்வாகக்காணப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு இரத்தப்புற்றுநோய் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

B cell Acute lymphoblastic leukemia நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்தோஷிற்கு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயின் மூன்று ஆண்டுகால மருத்துவ சிகிச்சையில், ஒரு வருடம் தீவிரமாகவும், 2 வருடங்கள் கீமோதெரப்பிக்கான பராமரிப்பு சிகிச்சையும் அளிக்கப்படும். இந்த மூன்று ஆண்டுகால சிகிச்சைக்கு 3-4 லட்சம் வரை செலவாகும். கீமோதெரபி, இரத்தம் மாற்றுதல் மற்றும் நோய்த்தொற்றலின்போது போடப்படும் IV ஆண்டிபயோட்டிக் மருந்துகளுக்கு, இந்தத் தொகை பயன்படும். ஆனால், இந்தச்சிகிச்சையின்போது எதிர்பாராத வகையில் ஏற்படும் சிக்கல்கள் அல்லது தீவிரமான நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க மேலும் 2-3 லட்சம் செலவாககூடும்.

மருத்துவமனை வருபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு சுத்தம் செய்யும் பணியாளரின் மகனான சந்தோஷின் உயிரைக் காப்பாற்ற, அவரிடம் போதுமான வருமானம் இல்லை. எனினும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, ஆதரவை தெரிவிக்க இங்கு லட்சக்கணக்கானோர் இருப்பதை தெரியப்படுத்துவதற்காக ‘EDUDHARMA’ இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. EDUDHARMA-வுடன் சேர்ந்து அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முன்வருவோம். இந்தச் செய்தியை முடிந்தவரை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்தும், சந்தோஷிற்கு இன்னும் பல உதவிகரங்கள் கைகொடுக்கவும் உதவலாம். நம்முடைய சிறிய பங்களிப்பு, ஒரு குழந்தையின் வாழ்க்கையையே திருப்பித்தரும்!

சந்தோஷின் சிகிச்சைக்கு பண உதவி செய்ய விரும்புவோர் இந்த லின்கிற்குச் சென்று உதவலாம்.

www.edudharma.com/fundraiser/4-year-old-santhosh-blood-cancer

ஆதார ஆவணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*