உயிருக்கு போராடும் 1 மாதமே ஆன குழந்தையை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம்-ருக்மணி தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை இறந்து விட்டது. இதனால் அந்த தம்பதி மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். பின்னர், டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் ருக்மணிக்கு மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைத்தது.

அவருக்கு கடந்த மாதம் 5-ம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருவரும் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஆண் குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதயக்கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு சென்றது. இதனால் குழந்தை கோயம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. மூச்சு விட இயலாமல் குழந்தை உயிருக்காக போராடுவதை பார்த்த குழந்தையின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரால் குழந்தையை பராமரிக்க முடியவில்லை. குழந்தையின் தந்தை செல்வம் திருவண்ணாமலையில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவரால் குழந்தையின் சிகிச்சை தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. தன் குழந்தையின் உயிரை காப்பாற்ற இருவரும் போராடி வருகின்றனர்.

குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்ற 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. குழந்தை இல்லாமல் இருந்த பெற்றொருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனாலும், அதனை கொண்டாட முடியாமல் தவித்து வரும் பெற்றோருக்கு உதவுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும், குழந்தையின் உயிரை மட்டுமல்லாமல் அவரின் தாய் உயிரையும் காப்பாற்றும்.
ஆன்லைன் மூலம் நிதி உதவி வழங்க விரும்புபவர்கள் இந்த லிங்கை

https://www.edudharma.com/campaigns/savetwinbabies

பயன்படுத்தி நிதியுதவி செய்யலாம். மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா, ரத்னம் டெக்சோன், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி,கோயம்பத்தூர், தமிழ்நாடு- 641021
+919600111639
+919087766633

உங்களின் பங்களிப்பு 1 மாத குழந்தை உயிரை காப்பாற்ற உதவும்

குழந்தையை காப்பாற்ற கிளிக் செய்யுங்கள்

ஆதாரமான ஆவணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*