நீங்கள் செய்யும் ஒரு Share நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

‘உலகத்தில் வயதான பெற்றோர்களை நினைத்து கவலைப்படும் பிள்ளைகளைப் பார்ப்பதில் வேதனை என்றால், மரணத்தின் விளிம்பில் இருக்கும் பிள்ளையைப் பார்க்கும் பெற்றோருக்கு, அதைவிட பல மடங்கு ஏற்றுக்கொள்ள முடியாத உயிர் வலி ஏற்படுகிறது’, என ஆதித்யாவை நினைத்து துடிக்கும் தாயைப் பார்க்கும்போது விளங்குகிறது.

பீகாரில் உள்ள சிறிய கிராமத்தில், பிறந்த முதல் நாளே ஆதித்யாவுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துவிட்டனர். இதனால் ஆதித்யா பிறந்த மகிழ்ச்சி அவனது பெற்றோருக்கு ஒருநாள் கூட நீடிக்கவில்லை. மிகச் சிறிய வயதில் அறுவை சிகிச்சை என்பது ஆதித்யாவுக்கு சாத்தியமில்லை என்பதால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதுநாள் வரை மற்ற குழந்தைகளைப் போல சுட்டித்தனத்துடன் சுற்றித்திரிந்த ஆதித்யாவுக்கு, 2 வயதை எட்டியதும் பிரச்னை ஆரம்பித்தது. முன்பு போல் சுவாசிக்க முடியவில்லை. எப்போதும் சுட்டித்தனம் செய்யும் ஆதித்யாவால், மற்ற பிள்ளைகளைப் போல் விளையாட முடியவில்லை.

அடிக்கடி ஆதித்யாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்பதறியாது தவிக்கும்போதே பெற்றோருக்கு உயிர் போகும் வலி. இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக ஆதித்யாவின் பெற்றோர் மும்பைக்கு குடியேறினர். ஆதித்யாவின் தந்தை சஞ்சய், மும்பையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் பெறும் ஊதியம் அனைத்தும் ஆதித்யாவின் மருத்துவச் செலவுக்கும், மூன்று வேளை உணவு மற்றும் வாடகைக்குமே போதுமானதாக இருக்கிறது.

ஆனால், மும்பை மருத்துவமனை, உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே ஆதித்யா உயிர் பிழைப்பது சாத்தியம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒருபுறம் உயிருக்குப் போராடும் மகன், மறுபுறம் அவனை வாழவைக்க போராடும் பெற்றோர் என நொடிக்கு நொடி வாழ்வா? சாவா? போராட்டத்தில் அவர்களது வாழ்க்கை. ரூ.2.5 லட்சம் இருந்தால் தனது மகனுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்று சஞ்சய் ஓயாது உழைத்து வருகிறார். தாய், இரவு பகல் பாராமல் ஆதித்யாவை கவனித்திக்கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி ஆதித்யாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். சிகிச்சைக்கான செலவுக்கு பணத்தை ஏற்பாடு செய்யும் வரை ஆதித்யாவின் நோய் காத்திருப்பது சாத்தியமில்லை. அதற்கான வேலைகளில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றாக ‘ImpactGuru‘ இணையதளமும் ஆதித்யாவுக்கு உதவி செய்ய தங்களது கரங்களை நீட்டியுள்ளது. ஆதித்யாவின் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் முயற்சியில் இம்பாக்ட்குரு இறங்கி இருக்கிறது. தற்போதிருக்கும் காலகட்டத்தில் சிறு தகவல் கூட சமூகவலைதளங்களில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில், ‘ImpactGuru‘ இணையதளம் மூலம் ஆதித்யாவுக்கு உதவி செய்ய முடியும் என்கிற தகவலை ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளங்களில் ஷேர் செய்து நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம். இதன் மூலம் அந்தச் சிறுவனின் வாழ்வை மீட்பதோடு, ஆதித்யா பெற்றோரின் உயிரையும் திருப்பி தரும் முயற்சியும் வெல்லும்.

உங்களால் முடிந்த உதவியை இந்த குழந்தைக்கு செய்யுங்கள் இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து இந்த குழந்தைக்கு உதவி கிடைக்க உதவுங்கள்

இந்த லிங்கை கிளிக் செய்து விதேசிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.

https://goo.gl/XBP69J

ஆதார ஆவணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*