கஷ்டங்கள் தீர ஒவ்வொரு ராசியினரும் வணங்க வேண்டிய சித்தரும் மந்திரமும்!

மனித நல்வாழ்வுக்கு மோட்ச வீட்டை கொடுக்க தன்னை அர்ப்பணித்து கொண்டவர்கள் தான் சித்தர்கள். சித்தர்கள் பிரவேசிக்கும் உலகம் மிகப்பெரியது, சித்தர்களின் வழிகாட்டுதலின் படி வாழ்க்கை அமைத்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்னை உண்டு இருப்பினும் சிலருடைய பிரச்னை ஒரு குறிப்பிட காலகெடுவுக்குள் முடிந்துவிடும் சிலருடைய பிரச்னை வருடக்கணக்கில் முடிவதில்லை சிலருக்கு வாழ்கையே பிரச்சனையாக தான் உள்ளது. இதற்கெல்லாம் ஜோதிடம் பார்த்து பல பரிகாரங்கள் செய்தாலும் துயரங்கள் துடைக்கபடுவதில்லை. இதற்கு சரியான தீர்வு சித்தர்களின் ஜீவசமாதியே.

ஒவ்வொரு சித்தரும் ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் பிறந்த இராசி, நட்சத்திரம் உடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். சித்தர்கள் நட்சத்திர மண்டலத்துடன் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டமையால் தங்களின் ராசிகேற்ற சித்தர்களின் மந்திரத்தை உச்சரித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது இறைவாக்கு. ஜீவ சமாதிக்கு செல்லும் அன்பர்கள் மகான் கோரக்கரநாதரின் 108 மந்திரத்தை ஜெபித்த பின் தியானம் மேற்கொள்ளவேண்டும். ஜீவ சமாதியை நான்குமுறை மட்டுமே வலம்வரவேண்டும் (அத்திஸ்டானம்). வீட்டில் மாகன் படம் வைத்து பூஜை செய்யலாம். அந்தந்த ராசிகேற்ற சித்தர்களின் மந்திரங்களை தினதோரும் 108 தடவை உச்சரிக்கவேண்டும்.

பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்

மேஷ இராசி

அஸ்வினி நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம
பரணி நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம
கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம

ரிஷப இராசி

கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம
ரோகிணி நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம
மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம
மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம
மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம
மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம

மிதுன இராசி

திருவாதிரை நட்சத்திரம் – ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம
புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம

கடக இராசி

புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம
பூசம் நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம
ஆயில்யம் நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம

சிம்ம இராசி

மகம் நட்சத்திரம் – ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம
பூரம் நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம
உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம

கன்னி இராசி

உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம
உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம
உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம
அஸ்தம் நட்சத்திரம் – ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம
சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம

துலாம் இராசி

சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம
சுவாதி நட்சத்திரம் – ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம
விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம

விருச்சிக இராசி

விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம
அனுஷம் நட்சத்திரம் – ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம
கேட்டை நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம

தனுசு இராசி

மூலம் நட்சத்திரம் – ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம
பூராடம் நட்சத்திரம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம
உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம

மகர இராசி

உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம
திருவோணம் நட்சத்திரம் – ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம
அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம

கும்ப இராசி

அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம
சதயம் நட்சத்திரம் – ம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம
பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம

மீன இராசி

பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம
உத்திரட்டாதி நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம
ரேவதி நட்சத்திரம் – ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*