நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

குட்டிச் செல்லம் திவாகர், இந்த உலகத்திற்குள் வந்து தனது பெற்றோருக்கு பெருமகிழ்ச்சியை அளித்தான். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரத்திலேயே கலைந்துபோனது. குழந்தைக்கு கல்லீரல் மற்றும் இதயத்தில் கோளாறு என்று மருத்துவர்கள் சொல்ல, திவாகரின் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டனர். அதற்குப்பின் இரண்டு வாரங்கள் அரசு மருத்துவமனையில் திவாகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு திவாகரின் கல்லீரல் கோளாறு தீர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் பிரச்னை அதோடு முடிந்துவிடவில்லை, DORV/TGA, VSD, Pulmonary Stenosis என்னும் இதய நோயால் குழந்தை திவாகர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இதற்கடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான மருத்துவ சோதனைக்கு திவாகரை அழைத்து வருமாறு, அவனது தந்தை கார்த்திக்கிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவரின் அறிவுறுத்தல்படி கார்த்திக், திவாகரை சோதனைக்கு அழைத்துச் சென்றாலும், மறுப்பக்கம் திவாகருக்கு அவ்வப்போது உடல்நலம் மோசமாகிக் கொண்டே இருந்தது. சில நேரங்களில் அவனது உடல் முழுக்க நீல நிறம் பாரிக்கும். இது திவாகரின் பெற்றோர் கார்த்திக் மற்றும் சிந்துவுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது.

இதற்கிடையில் மருத்துவ முகாம் ஒன்றில் திவாகரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தேவையற்ற சிக்கல்களை உடனடியாக தவிர்க்க நோயின் ஆரம்பத்திலேயே Biventricular repair (Rastelli/ Root Trans-location procedure/ Univentricular repair) என்னும் இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ. 3,60,000 தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தேவையான மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு மொத்தம் ரூபாய் 4 லட்சம் தேவையாக உள்ளது.

திவாகரின் தந்தை கார்த்திக் ஒரு விவசாயக் கூலி. தினமும் ரூ.100-200 மட்டுமே அவரது தினக் கூலியாகும். சொந்த மகனைக் காப்பாற்ற முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமையில் திவாகரின் பெற்றோர் இருக்கின்றனர். “எங்களிடம் சொந்த வீடு அல்லது சொந்தமாக விவசாய நிலம் இருந்தால், அதனை விற்று கூட எங்களது மகனை காப்பாற்றலாம். ஆனால் அதுபோன்று எதுவும் எங்களுக்கு சொந்தமாக இல்லை. எங்கள் மகனை எவ்வாறு காப்பாற்றுவது என்றும் தெரியவில்லை” எனக் கலங்கும் தந்தை கார்த்திக்,”தினமும் அவன் விரைவில் குணமடைய வேண்டும், மற்ற குழந்தைகளைப் போல விளையாட வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். அசவுகரியம் மற்றும் சுவாச பிரச்னை காரணமாக அவனால் தவழவும், நடக்கவுமே முடியவில்லை” என்று கண்ணீர் வடிக்கும் அம்மா சிந்து.

திவாகரின் மருத்துவ செலவுக்கான தொகையைப் பெறுவதற்கு அவனது பெற்றோருக்கு வேறு ஏதும் வழியில்லாததால், குழந்தையைக் காப்பாற்ற நம் அனைவரின் உதவியையும் நாடியிருக்கின்றனர். இவர்களுடன் திவாகரின் உயிரைக் காப்பாற்ற ‘Edudharma’ இணையதளமும் போராடிக்கொண்டிருக்கிறது. நம்மால் ஆன உதவியை https://goo.gl/QRzY1V எனும் லிங்கிற்குச் சென்று செய்யலாம். “இன்னும் ஒரு வாரத்துக்குள் திவாகருக்கு ஆபரேஷன் நடைபெறுவது நல்லது என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளதால், இத்தகவலை முடிந்தவரை நமக்குத் தெரிந்த அனைவருக்கும் வாட்சாப் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்து உதவே வேண்டும்’ என Edudharma வேண்டுகோள் விடுத்துள்ளது. தானம் செய்வோம், மனிதத்தை உயர்த்திப் பிடிப்போம்!

உங்களால் முடிந்த உதவியை இந்த குழந்தைக்கு செய்யுங்கள் இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து திவாகருற்கு உதவி கிடைக்க உதவுங்கள்.

Account Number: 2223330058162914

Beneficiary Name: Diwakar

IFSC: YESB0CMSNOC

உங்கள் உதவியை மேலே குறிப்பிட்ட வங்கியில் செய்யலாம் அல்லது ஆன்லைனில் உதவி செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

இந்த லிங்கை கிளிக் செய்து திவாகருற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.

https://goo.gl/QRzY1V

ஆதார ஆவணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*