நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருக்கும் 4 வயது குழந்தையை காப்பாற்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தீபக் (4). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தீபக்கின் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அக்யூட் லிம்போஸ்டிக் லுகேமியா எனும் ரத்த புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தீபக்கை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுவர்களுடன் விளையாட வேண்டிய வயதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனின் நிலைமையை கண்டு பெற்றோர்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புற்றுநோய் கிருமிகள் பாதித்த உடல் உறுப்புகளை மாற்றுவதற்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு 2.5 லட்சம் ரூபாய் மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய 10 லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, தீபக்கின் பெற்றோர் மருத்துவமனை சிகிச்சைக்காக தங்களது கையிருப்பில் இருந்தும், பலரிடம் கடன் வாங்கியும் சுமார் 2 லட்சம் செலவு செய்துள்ளனர். மேற்கொண்டு சிகிச்சைக்கு செலவு செய்ய அவர்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் உங்களது உதவியை நாடுகின்றனர். சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ள சிறுவனை காப்பாற்றுங்கள். அவன் மீண்டும் உடல் நலம் சீராகி தனது நண்பர்களுடன் பள்ளிக்கு செல்ல உதவுங்கள்.

நல்ல மனம் படைத்த உங்களை போன்றோரால் தான் தீபக்கின் வாழ்க்கைக்கு வழிகாட்டமுடியும் என்பதால் தீபக்கின் பெற்றோர் உதவிடுமாறு கோரியுள்ளனர். எனவே, உங்களது சிறு தொகையும் தீபக்கின் வாழ்வில் ஒளியேற்றும் என்பதில் மிகையில்லை.

உங்களால் முடிந்த உதவியை இந்த குழந்தைக்கு செய்யுங்கள் இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தீபக்கிற்கு உதவி கிடைக்க உதவுங்கள்

இந்த லிங்கை கிளிக் செய்து விதேசிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.

https://goo.gl/vkXbpe

ஆதார ஆவணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*