ராஜ் குமார் – ரேவதி தம்பதியினர்க்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ரேவதி கருத்தரித்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பற்றி நிறைய கனவுகள் வைத்திருந்தனர்.மகன் பிறந்தால் பூவரசன் என்றும் மகள் பிறந்தால் பூவரசி என்றும் முடிவுசெய்தனர். மழை இல்லாமல் , நிலமெல்லாம் வற்றிய நிலையில், வாழ்க்கையின் மீது அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவர்களின் குழந்தை தான். ஆனால் இரண்டே மாதத்தில் பூவரசனுக்கு இதய பிரச்சனை இருப்பது தெரிந்து அவர்களின் எல்லா நம்பிக்கையும் உடைந்து போனது.
பூவரசன் இதய நோயால் பாதிக்கப்பட்டு , தொடர்ந்து கடுமையான சளி மற்றும் மூச்சு திணறலால் சிரமப்படுகிறான்
பூவரசன் ஆரோக்கியமாகவே இருந்தான்.அவனின் வருகை ரேவதி மற்றும் ராஜ் குமாருக்கு மிகவும் மனநிறைவாக இருந்ததது. ஆனால் அவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. பூவரசன் பிறந்து இரண்டு மாதங்களில் திடிரென்று கடுமையான காய்ச்சல் வந்தது, அது சீக்கிரம் சரியாகிவிடும் என்று நினைத்தனர். ஆனால் காய்ச்சலுடன் மூச்சு திணறலும் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர். பூவரசனை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்தனர்.
“சளியும் இருமலும் இருந்து கொன்டே இருந்தது. ஆனால் குழந்தைகளுக்கு சகஜமாக வரக்கூடியது என்று தான் நினைத்தோம். மருத்துவமனைக்கு சென்ற போது, சில மாத்திரைகள் தந்து, மேலும் ஒருவாரமாகியும் சரியாகவிட்டால் திரும்பி வர சொன்னார்கள். மாத்திரைகள் எதுவும், குணப்படுத்தவில்லை. மூச்சு திணறல் ஏற்பட்ட போது, குழந்தையை தூக்கி கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு ஓடினோம். ஆனால் என் மகனுக்கு இதய நோய் இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
இதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும்
பூவரசனின் உடல் நிலை மோசமாகி கொன்டே வருகிறது. சளியும் இருமலும் இருந்து கொன்டே இருக்கிறது. மூச்சு திணறலால் பால் குடிப்பதற்கு கூட சிரமப்படுகிறான். உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“இதய நோய் இருக்கிறது என்று தெரிந்ததும், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி கொண்டு சென்னைக்கு வந்தோம். அறுவை சிகிச்சை செய்தால் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று சொன்னார்கள். ஒருபக்கம் என் மகனை காப்பாற்றுவதற்கு வழி இருப்பது ஆறுதலாக இருந்தாலும், அது எங்கள் சக்திக்கு மீறி இருப்பது தாங்க முடியாத துயரமாக இருக்கிறது.”
வருடம் முழுவதும் உழைத்தாலும் , சிகிச்சைக்கான பணத்தை , பெற்றோர்களால் சம்பாதிக்க முடியாது
ராஜ் குமார், திருவண்ணாமலையில், கூலி விவசாயியாக வேலை செய்கிறார். தனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்து வறுமை என்பது தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. பூவரசனின் வருகையும் அவனின் எதிர்காலமும் ஒரு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் தந்தது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் பூவரசனை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அவர்களின் கனவுகள் எல்லாம் உடைந்து போனது.
“ஒரு மாதத்திற்கு ருபாய் 1000 வருமானம் வருவதே பெரிதாக இருக்கிறது. இந்த வருமானத்தில் தான் எல்லா செலவுகளையும் பார்த்து கொள்கிறேன். என் மகனின் உயிரை காப்பாற்ற 3 லட்சம் தேவை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், என் குழந்தையின் உயிருக்கு ஆபத்து. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளேன். ஒவ்வொரு முறையும் மூச்சு திணறல் ஏற்படும் போது , என் உயிர் போய் வருகிறது. ”
உங்களால் உதவ முடியும்
2 மாத குழந்தை பூவரசன் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும். அவனின் பெற்றோர்கள் தங்களின் ஒரே மகனை காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றனர். உங்களின் உதவியால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும்.
உங்களின் பங்களிப்பு 2 மாத குழந்தை பூவரசனின் உயிரை காப்பாற்ற உதவும்
ஆதாரமான ஆவணங்கள்
பூவரசனை காப்பாற்ற கிளிக் செய்யுங்கள்