மேஷம்
அன்பார்ந்த மேஷ ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்கள் உடல்நலனில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் குணமாகும். உடல்நலம் சீராக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளையும் மன உளைச்சல்களையும் கைவிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் தனலாபம் உண்டு. பணத்தேவை பூர்த்தியாகும் அதே சூழலில் சேமிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். உங்கள் வேலையில் பதவி உயர்வோ, தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் முன்னேற்றமோ ஏற்படும். ஆனால் கடினமான உழைப்பை செலுத்தவேண்டிய காலம் இது. தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
இந்த வருடம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண நிச்சயம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால் திருமணத்தை அடுத்த குருப்பெயர்ச்சிக்கு பின் செய்வது நன்மையளிக்கும்.
ரிஷபம்
அன்பார்ந்த ரிஷப ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்கள் உடல்நலனில் சிறிது பின்னடைவு ஏற்படும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. தன்வந்திரி பகவானை வணங்கி வந்தால் உங்கள் உடல்நல பிரச்சனைகள் குறையும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஆனாலும் அதனை உங்கள் கடின உழைப்பால் சரி செய்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எப்பொழுதையும் விட பொருளாதார வளர்ச்சி நன்றாகவே இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். அதை சுப செலவுகளாக மாற்றிக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.
மிதுனம்
அன்பார்ந்த மிதுன ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்கள் உடல்நலனில் சிறு உபாதைகள் ஏற்படும். குறிப்பாக தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் நிலையாக நடக்கும். கடின முயற்சியும் தெய்வபக்தியும் இருந்தால் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்படும். புதிய புதிய சிந்தனைகள் ஏற்படும், புதிய திட்டங்களால் லாபம் ஏற்படும். தொலைதூர பயணங்கள் லாபமாக மையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்தால் நடைபெறும் வாய்ப்புள்ளது.
கடகம்
அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிக சாதகமான ஆண்டாக அமையும். தொழிலில் நல்ல வளர்ச்சியை காணலாம். ஆனால் இவ்வருடம் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அதி அக்கறை காட்டுவது உத்தமம். ஏனெனில் வருடம் முழுதும் உடல்நலம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும் கிரக அமைப்பு நிலவுகிறது. சுய ஜாதகத்தின் அடிப்படையில் இதில் மாற்றம் இருக்கும். இந்த வருடம் புதிய தொழில் தொடங்கவோ, அல்லது தொழிலை மேம்படுத்தவோ செய்ய உகந்த காலமாக அமைகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் சமுக அந்தஸ்து கூடும். சரியான முதலீடுகளில் பணத்தை சேமிப்பது நன்மை பயக்கும்.
சிம்மம்
அன்பார்ந்த சிம்ம ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருட ஆரம்பத்தில் சில சளி தொடர்பான நோய்கள் வந்து அகலும். சோர்வும் களைப்பும் ஏற்படும். இந்த பிச்சனைகள் பிப்ரவரி மாத இராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு அகலும். வேலையில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். தொழில் தொடர்பாக அதிருப்தியே நிலவும். புதிய தொழில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார ரீதியாக கடுமையாக உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையில் முடியும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நம் மனைவி தானே கணவன் தானே என்று விட்டுகொடுத்து சென்றால் தேவையில்லாத மன உளைச்சல்களை தவிர்க்கலாம்.
கன்னி
அன்பார்ந்த கன்னி ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உடல்நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். உடல்நிலை முன்னேற்றமும் சிக்கலும் கலவையாக இருக்கும். தொழில் தொடர்பான விடயங்களிலும் வெற்றி தோல்வியென சமமான வாய்ப்புகளே காணப்படும். ஆனால் பொருளாதார நிலையில் முன்னெப்போதும்விட நல்ல நிலையில் இருப்பீர்கள். பல வழிகளில் பணவரவுகள் இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தொழில் சம்மந்தமாக தொலைதூர பயணங்கள் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.
துலாம்
அன்பார்ந்த துலாம் ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலை காணப்படும். ஏற்கனவே இருந்துவந்த உடல்நல கோளாறுகளும் உங்களைவிட்டு அகலும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். மார்ச் மாதத்திற்கு பின்னான கிரக நிலை மாற்றங்கள் சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும். எவரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது நல்லது இதனால் ஏற்படும் ஏமாற்றங்களை தவிர்க்கலாம். பொருளாதாரநிலை நல்ல நிலையில் இருக்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இந்த வருட நடுவில் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.
விருச்சிகம்
அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நல குறைகளை உதாசினம் செய்ய வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலில் வெற்றிவாய்ப்புகள் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் பணிமாற்றம் ஏற்படலாம். தொழில் நிமித்தமாக வெளிநாட்டு பயணங்கள் ஏற்படலாம் அதனால் நன்மை ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் அமையும். திருமணமானவர்களுக்கு வாழ்கைதுனையின் நல்ல ஆதரவும் அனுசரணையும் கிடைக்கும்.
தனுசு
அன்பார்ந்த தனுசு ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உடல்நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். உடல்நிலை முன்னேற்றமும் சிக்கலும் கலவையாக இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிக சாதகமான ஆண்டாக அமையும். தொழிலில் நல்ல வளர்ச்சியை காணலாம். பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் பெறுவீர்கள். பூர்வீக சொத்து கைவசமாகும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. தொழில் லாபகரமாக நடைபெறும். பெற்றோர்களின் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும். வாழ்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
அன்பார்ந்த மகர ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உடல்நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முதல் மூன்று மாதங்கள் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கும் பின் வரும் மாதங்களில் உடல்நிலையை கவனித்துகொள்வது நல்லது. செலவுகள் அதிகரிக்கும் ஆனால் பண வரவு அதை ஈடு செய்யாது. பெருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். இல்லற வாழ்வு இன்பமாக அமையும்.
கும்பம்
அன்பார்ந்த கும்ப ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலை காணப்படும். ஏற்கனவே இருந்துவந்த உடல்நல கோளாறுகளும் உங்களைவிட்டு அகலும். உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் வாங்க சரியான காலமாக அமையும். இந்த வருடம் உங்கள் குடும்ப வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். இந்த வருடம் முழுதும் சாதகமான நிலை நிலவுவதால் இதை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேரே கடுமையாக உழைப்பது நல்லது.
மீனம்
அன்பார்ந்த மீன ராசி அன்பர்களே, வரும் 2019 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்கள் உடல்நிலையில் சீரான நிலை நிலவினாலும் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் கூடாது. உடற்பயிற்சி தியானம் போன்றவற்றை செய்து உடல் நலத்தையும் மன நலத்தையும் பேணலாம். போதிய உறக்கத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் உடல்நலனையும் மன நலனையும் பேணுவது அவசியமாகும். நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கென தனி முத்திரை பதிப்பீர்கள். பொருளாதாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது.