அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை , பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்வார்கள். இந்த உலகில் பணம் இல்லாமல் வாழும் வாழ்க்கை கடினமான ஒன்றாகும். உலகில் பெரும்பாலான மக்கள் பணக் கஷ்டத்தால் அவதியுற்று வருகின்றனர். கடினமாக உழைத்தாலும் அன்றன்றைய வாழ்க்கைய ஓட்டுவதே பெரும் கஷ்டமாக பலருக்கு அமைந்துவிடுகின்றது. நம்மிடம் பணம் சேர குபேரனின் அருள் மிகவும் முக்கியமாகும். குபேரனின் அருளை பெற இந்த மந்திரத்தை தினம் சொல்லிவந்தால் குபேரனின் அருள் கிட்டும்.
அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் சிரமமெல்லாம்
உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ!
இன்றோடு குறை விலக இனிய தெய்வம் குபேரனே!
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இது சமயம்!
தேவர்களின் செல்வத்திற்கு அதிபதியான இந்த குபேரனின் மந்திரத்தை தினமும் காலை 7 மணிக்குள் குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜையறையில் இருக்கும் லஷ்மி குபேரர் படத்திற்கு முன் நெய்தீபம் ஏற்றி, கற்கண்டு நிவேதனமாக வைத்து பூஜை செய்து வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஆறுமுறை சொல்லி வந்தால் ஒரு மண்டலத்தில் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்க குபேரன் அருள் செய்வார்.