அந்தரத்தில் தொங்கும் ஒற்றை தூண் – விடையின்றி நீளும் மர்ம கோயில்!

0
741

பெங்களூரிலிருந்து 125 கிமீ தொலைவில் தெற்கு ஆந்திராவில் இருக்கும் ஆனந்தபுரா எனும் பகுதியில் உள்ள லேபக்ஷி கிராமத்தில் ஒரே ஒரு தூண் மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் லே பக்ஷி வீர பத்ர கோயில் இன்றும் நமது முன்னோர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது.

இராமாயண காலத்தில் ஜடாயு ராவணனால் தாக்கப்பட்டு கிடந்த போது, ராமன், அதை குணமாக்கி, எந்திரி பட்சி(லே பக்ஷி) என்று சொன்னார். ஜடாயு விழுந்து கிடந்த இடத்தில் விரன்னா, விருப்பன்னா என்ற இரண்டு சகோதரர்களால் 16 ம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது .

இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலை இந்த கோயிலில் தான் இருக்கிறது. இந்த கோயிலில் இருக்கும் ஒவ்வொரு சிற்பங்களும் கலைநயத்துடன் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த கோயிலில் ஏழு தலை நாகத்தின் குடையில் வீற்றிருக்கும் பிரமாண்ட சிவலிங்கம் பார்பவர்களை பெரிதும் கவர்கிறது.

இந்த கோயிலில் சுமார் 70 தூண்கள் இருக்கின்றன இதில் ஒன்றே ஒன்று மட்டும் பூமியை தொடாமல் தனியாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளது. இந்த தூணின் அடியில் மெல்லிசான துணியை அல்லது பேப்பரை இந்தப் பக்கம் செலுத்தி அந்தப் பக்கம் இழுக்கலாம். அந்தளவிற்கு அடியில் மெல்லிய இடைவெளி இருக்கிறது.

இந்தத் தூண் குறித்து பிரிட்டன் பொறியாளர்கள் ஆராய்சிகள் மேற்கொண்டும் இன்றும் எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது என்று அவர்களால் கண்டறிய முடியாமல் திகைத்து நிற்கின்றனர்.இது நமது முன்னோர்களின் சாதுரியமான கட்டிடக் கலைக்கு சான்றாகவும் மிகவும் வியப்பாகவும் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here