ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.
ஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்னுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேஷமாகும். விஷ்னு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயற்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். பாப மோசனி ஏகாதசி தினத்தன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்பவர்களுக்கு அந்த பரந்தாமனின் அருள் கிடைக்கும். நேற்றைய ஏகாதசியை தவற விட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். மாதந்தோறும் ஏகாதசி விரத இருந்தாலே பரந்தாமனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.
ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.