நாகதோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்களும், செல்லவேண்டிய தலங்களும்

ராகு-கேதுவின் கோச்சார அமைவுகளை வைத்து தான் ஒருவருடைய ஜாதகத்தில் நாகதோஷத்தை கணிப்பார்கள். பெரும்பாலும் நாகதோஷத்தைவிட ராகு-கேது குற்றமே இருக்கும், ராகு-கேது குற்றமும் நாகதோஷமும் ஒரே அனுகுலத்தை கொடுத்தாலும் ராகு-கேது குற்றத்தை எளியபரிகாரம் முலம் சரி செய்து விடலாம், ஆனால் நாகதோஷம் உள்ளவர்களுக்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது அதற்கேப்ப வரனை பார்க்க வேண்டும்.

முன்னோர்கள் தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், இந்த தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்வீக அடையாளம்.

நாகதோஷம் உள்ளவர்களுக்கு திருமனத்திற்க்கு முன்பே நாகதோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்யவேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்தால் நல்ல வரனும் அமையும் அவர்கள் வாழ்வும் சுபிற்சம் பெரும். பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது என்பதோடு ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது என்கின்றார்கள். ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் ஸ்ரீநாகராஜ பூஜையை செய்வது நல்லது.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்லில் ராகு காலத்தில் பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். நாகதோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம் இதுவே ஆகும். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு, நாகதோஷ பரிகாரத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு ராகுவும், கேதுவும் ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு, கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாகூர், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் போன்ற நாகதோஷ பரிகாரத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*