குருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்!

0
1024

மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பகவான் இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் இடத்தின் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறுவர்.

இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்.

இந்த குருபெயர்ச்சினால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருபகவான் பல நற்பலன்களைத் தரவிருக்கிறார்.

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

 

இன்று குருவுக்கு உரிய வியாழக்கிழமை என்பதால் விரதம் இருப்பதும் மிகவும் நல்லது. காலையில் நீராடி, பூஜையறையில் தீபமேற்றி, குருவுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வழிபடலாம். உணவைத் தவிர்த்து பால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்று இரவு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, குருபகவானுக்கு உகந்த மஞ்சள் வஸ்திரம் மற்றும் மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், குருபகவானின் திருவருள் பெற்று, யினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

மறுநாள் காலை மறுபடியும் பூஜையறையில் தீபமேற்றி, குருபகவானை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here