இந்த தூண் இடிந்து விழுந்துவிட்டால் உலகம் அழிந்துவிடுமாம்!

இந்தியாவில் சில மர்மங்களும், அமானுஷ்யங்களும் இன்று வரை அறிவியலால் கூட பதில் சொல்லமுடியாத புதிராக நிலவி வருகிறது.

இந்த வரிசையில் பல யுகங்களை கடந்தும் இடியாமல் நிற்கும் ஒரு தூண் குறித்தும், இந்த தூணிற்கு பின்னால் ஒளிந்துள்ள மக்களின் நம்பிக்கை குறித்தும், இன்று உலகத்தால் மிக ஆச்சர்யத்துடன் பார்க்கப்படும் கோயில் தான் ஹரிஷ்சந்திரகட்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அஹமத் நகரில் கலாசூரி பேரரசால் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் கேதாரேஷ்வர் என்ற ஆச்சரிய குகையினை காணலாம்.

குகைக்கு உள்ளே சென்றால் நீரினால் சூழப்பட்ட 5 அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை பார்க்கலாம். எப்பொழுதும் மிகவும் குளிர்ச்சியாக உள்ள நீரை கடந்து சிவனை தரிசிப்பது சற்று கடினமான விடயமாகும்.

இங்கு சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் உள்ளன. இவை “சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்” ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அந்த யுகத்தை குறிக்கும் குறிப்பிட்ட தூண் இடிந்து விழுந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த வகையில் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகத்தை சேர்ந்த மூன்று தூண்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் கலியுகத்தை குறிக்கும் நான்காவது தூண் மட்டும் நிற்கிறது.

கலியுகத்தில் உலகில் அதர்மங்கள் அதிகரித்து உலகம் துயரில் மூழ்கும் என்றும். கலியுகத்தின் முடிவில் இந்த தூண் இடிந்து விழும் என்றும் இதன் பின் இந்த உலகம் அழிந்து மீண்டும் சத்ய யுகத்திலிருந்து மீண்டும் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*