சனிஸ்வரை போல கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது முன்னோர் வாக்கு. இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு மாறுகிறார் சனிஸ்வரர். ராசிக்கு முன்னும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனி சஞ்சரிப்பதை ஏழரை சனி என்கிறோம். இந்த காலகட்டத்தில் ஏழரை ஆண்டுகள் ஒரு ராசியில் சனிசஞ்சரிக்கும். ஏழரை சனி என்றதும் அனைவரும் பயப்பிடுவார்கள், அப்படி பயப்பிடவேண்டிய அவசியம்
இல்லை. சனி உச்சம் பெற்ற ராசிக்காரர்களுக்கு இந்த ஏழரை சனி உள்ள காலகட்டத்தில் சனி பகவான் நன்மையையே அள்ளித்தருவார்.
ஓருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்டவைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான்
ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும்.
சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் 7 சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம்,
ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.
அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார். அதே சமயத்தில் மீனம், தனசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து
முன்னேற்றப்பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே உலகம்.
கோசார ரீதியில் சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். தினசரி
கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசி இல்லத்துக்கே வந்து நிற்கும் காலம் `ஜென்மச்சனி’ இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான
பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு
தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.
சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற
திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும்.