‘சேது’ திரைப்பட நடிகை அபிதாவா இது அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்…

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சீனிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிதா.

விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. விக்ரமிற்கு சீயான் என்ற பெயரை கொடுத்த படம்.

இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இந்த படத்திற்காக 1999 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் விருது பரிந்துரை செய்யப்படார்.

 

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவருக்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.

சேது படத்திற்கு பின்னர் தமிழில் சீறி வரும் காளை , பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பினார். தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.

இவர் சன் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான சன் டிவியின் ,சூப்பர் ஹிட் சீரியல் ‘திருமதி செல்வம்’ என்ற நெடுந்தொடரில், அர்ச்சனா கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இந்த சீரியல் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தங்கமான புருஷன்’ என்ற சீரியலில் நடித்துள்ளார்.இவரின் கதாபாத்திரமானது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவின் தனியார் நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரியாக பணிபுரிந்த டி ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களின் திருமணமானது கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*