ஒரு வாரத்திலுள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே அந்தந்த நாட்களின் உகந்த கடவுளுக்கு விரதங்களோ வழிபாடுகளோ செய்து வந்தால் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
திங்கள்கிழமை திருநீலகண்டனான சிவனுக்கு உகந்த நாளாகும். திங்கட்கிழமைகளில் சிவனுக்கு பால், அரிசி, சக்கரையை படைப்பது சிறந்தது. இந்த கிழமைகளில் சிவனுக்கு விரதம் இருந்து வந்தால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
செவ்வாய் கிழமை துர்க்கையம்மன், முருகன் மற்றும் அனுமன் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும். செவ்வாய் கிழமைகளில் துர்கையம்மனுக்கு விரதமிருந்து ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் வாழ்வில் வளம் பெருகும். முருக பெருமானுக்கு விரதமிருந்து கந்தசஷ்டி படித்துவந்தால் நவகிரகங்களும் மகிழ்ந்து நன்மையளிக்கும்.
புதன் கிழமை விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும். புதன் கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வந்தால் சங்கடம் தீர்ந்து சந்தோஷம் பெருகும்.
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் திருமகளுக்கு உகந்த நாளாகும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு விரதமிருந்து மஞ்சள் நிற பூ சாற்றி வழிபட்டு வந்தால் வாழ்வில் துன்பம் நீங்கும், செல்வம் பெருகும்.
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மன் கோயில்களுக்கு சென்றுவருவது மிகவும் சிறந்ததாகும்.
சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கும், வெங்கடேச பெருமாளுக்கும், அனுமனுக்கும் உகந்த நாளாகும் இந்த நாட்களில் பெருமாளுக்கு விரதமிருந்து வந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும், அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் ஏழரை சனியின் தாக்கம் குறையும், சனீஸ்வர பகவானின் சந்நிதியில் எள்ளு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் ஏழரை சனியில் துன்பம் குறையும்.
நவகிரகங்களில் முதன்மையானவர் சூரியபகவானாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபாடு செய்துவந்தால் விளைச்சல் அதிகரிக்கும், வாழ்வு பிரகாசமாகும்