அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி ஆங்கு.
என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் பூமியில் மகிழ்ச்சியுடன் வாழ பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது இந்த குரல். ஆனால் பலருக்கு எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் இந்த பணம் கையில் சேருவதே இல்லை. ஆனால் சிலருக்கோ பணம் பல வழிகளில் அவர்களை தேடி வந்துகொண்டே இருக்கும்.
இதற்கெல்லாம் ஒரே காரணம் கர்மவினை மட்டுமே, நாம் சேர்த்துவைத்த ஊழ்வினையின் அடிப்படையிலேயே தான் நமக்கான இன்ப துன்பங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படுகின்றன என்கிறது வேதம்.
கடந்த பிறவி ஊழ்வினையை சரி செய்துவிட்டாலே இப்பிறவி மட்டுமல்ல நமது அடுத்த பிறவியும் மகிழ்ச்சியாக செல்வ செழிப்புடன் விளங்கும். அப்படிப்பட்ட ஊழ்வினையினை எளிதாக சரிசெய்யும் எளிய பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.
பணம் பணத்தை ஈர்க்கும் என்பது விதி, எனவே ஒவ்வொருவரும் உங்களின் பணம் வைக்கும் பெட்டியில் எப்பொழுதும் பணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், மேலும் ஒவ்வொரு நாளும் அந்த பெட்டியில் உங்கள் கையினால் ஒரு ரூபாயாவது சேர்த்து வர வேண்டும் எப்படிப்பட்ட சூழலிலும் அந்த பணத்தை முழுமையாக எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் எப்படிப்பட்ட கர்மத்தையும் கரைக்கும் எளிய வழி என்பது அன்னதானம் தான். பசித்தவனுக்கு சோறிடுவதை விட கர்மத்தை கரைக்கும் எளிய வழி எதுவுமே இல்லை. குறிப்பாக ஒவ்வொரு செவ்வாய், மற்றும் புதன் கிழமைகளில் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்களது கர்மத்தை விரைவில் கரைத்து உங்களை மகிழ்ச்சியான வாழ்கையை வாழ வழி வகுக்கும்.
அன்னதானம் என்றவுடன் ஏதாவது உணவகத்தில் வாங்கி செய்வதை விட, உங்கள் வீட்டிலேயே உங்களுக்கு சமைக்கும்போது அதே உணவை உங்களால் முடிந்த அளவு உங்கள் கையினால் செய்த உணவை பசித்தவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய் புதன் கிழமைகளில் வழங்கி வாருங்கள் அதிகப்படியாக ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே உங்களின் நிலை உயர்வதை நீங்கள் கண்கூடாக காணலாம்.
மேலும் உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் எப்பொழுதும் பணத்திற்கு கஷ்டப்படுபவர்களுக்கு வழங்கி வந்தால் ஒரு விதை எப்படி மரமாகி பல பழங்களை நமக்கு தருகிறதோ அதே போல் உங்கள் பணம் பன்மடங்காக பெருகி உங்களை தேடி வரும்.
மேற்குறிப்பிட்ட வழிகளை தவறாமல் செய்து வாருங்கள். உங்கள் வாழ்கை முன்னேற்றமடைவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.