வலிமை பட விஷயத்தில் தளபதியை பின்பற்றும் தல!

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இன்னும் பத்து நாள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியுள்ளதால் படத்தின் வேலைகள் அரக்கப்பரக்க நடந்து வருகின்றன.

ஆனால் அஜித் மட்டும் எந்த ஒரு அவசரமும் இல்லாமல் பொறுமையாக காய் நகர்த்தி வருகிறாராம். மேலும் நீண்ட நாட்கள் கழித்து தான் நடிக்கும் படம் வெளிவருவதால் கண்டிப்பாக ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

அந்த வகையில் அஜித் முதல் முறையாக ரிலீஸ் விவகாரத்தில் தலையிட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் வலிமை படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும், அப்டேட் எப்போது கொடுக்க வேண்டுமென்பதில் விஜய் படம் போலவே செயல்பட உள்ளாராம்.

எப்போதுமே அஜித் படம் அப்டேட்டுகள் முன்னறிவிப்பின்றி வெளியாகும். ஆனால் இந்த முறை சரியாக நேரம் குறித்து முன்னரே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வலிமை படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்த உள்ளார்களாம். மேலும் மாஸ்டர் படம் ரிலீஸ் விவகாரத்தில் கையாண்ட அனைத்து முறைகளையும் அஜித் வலிமை படத்தில் பயன்படுத்திக்கொள்ள உள்ளாராம்.

அந்த வகையில் படம் ரிலீஸாகி அடுத்த பதினைந்தாவது நாளில் ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என அஜித் கூறியுள்ளதாக தெரிகிறது. மாஸ்டர் படம் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வலிமை படத்தையும் அதேபோல் ரிலீஸ் செய்வதற்காக முக்கிய ஒடிடி தளங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

அதேபோல் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமை படத்தின் விளம்பரங்கள் எக்கச்சக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வலிமை படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் தன்னுடைய மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருப்பது தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*