தென்னிந்திய தமிழ் நடிகர் தல என அழைக்கப்படும் அஜித் அவர்கள், நடிப்பு தவிர கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராபி, ஹெலி கேம் தொழில் நுட்பம் என்று பல விதங்களில் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்பவர். எந்தளவுக்கு ஒரு தேர்ந்த நடிகராக உள்ளாரோ அதே அளவு நல்ல குடும்பத் தலைவராகவும் இருந்து வருகிறார். அதனால் தான் தன்னுடைய ரசிகர்களால் செல்லமாக அல்டிமேட் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார் தல.
அந்த வகையில், கடந்த வருடம் மிஸ்ஸான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்த வருடம் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் தல. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு முதல் 10 இடங்களுக்குள் வந்த தல அஜித், இந்த வருடம் 3 தங்க பதக்கத்தையும், 2 சில்வர் பதக்கத்தையும், 2 வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்திற்கு தமிழக காவல் துறை உயரதிகாரிகள் உட்பட பலர் தொடர்பு கொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.