90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

இவர் கடந்த 1993ம் ஆண்டு கார்த்திக் நடித்த சின்ன ஜமீன் படத்தில் அறிமுகமானார். அப்போது இருந்து முன்னணி கதாநாயகர்களான கார்த்திக், சரத்குமார், பிரபு ஆகியோருடன் நடித்து வந்தார்.குறிப்பாக கட்டபொம்மன்,வியட்நாம் காலனி,கர்ணா,வீர தாலாட்டு போன்ற 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் கடைசியாக தமிழில் 2008 ம் ஆண்டு வெளியான எங்க ராசி நல்ல ராசி என்ற திரைபடத்தில் தான் நடித்திருப்பார்.பிறகு இங்கு இவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ் சினிமாவில் இருந்த கவர்ச்சி கதாநாயகளில் ஒருவராக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் வினிதா.இவருக்கு இருந்த கட்டான உடலமைப்பை வைத்து அதற்கேற்பவே இயக்குனர்கள் கதையை தயார் செய்வார்கள். அப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஓய்வின்றி பரபரப்பாக நடித்து கொண்டிருந்த போதே கடந்த 2002ம் ஆண்டு விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

அதோடு வினிதா விபச்சாரம் செய்ய உதவியதாக அவரது தாய் மற்றும் தம்பியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு 2 வருடங்கள் நடந்தது. இறுதியில் வினிதா குற்றமற்றவர் என தீர்ப்பு வந்தது.

இது குறித்து வினிதா கூறும்போது, பொ லிசார் எங்களை திட்டமிட்டு சதி செய்து எங்களை சிக்க வைத்தனர். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது எங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்றார்.

தற்போது மலையாள படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*