தமிழ் சினிமாவில் இதுவரை வந்திருக்கும் த்ரில்லர் வகை திரைப்படங்களில் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று ராட்சசன் திரைப்படம்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சைக்கோ த்ரில்லர் படமான இத்திரைப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது மட்டுமல்லாமல் வணிகரீதியாக பெரிய வெற்றிபெற்றது.
ஏற்கனவே இந்த இருவர் கூட்டணியில் வெளிவந்த முண்டாசுபட்டி திரைப்படமும் பெரிய வெற்றி திரைப்படம் என்பதால் இந்த இருவரையும் இணைத்து ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்க தயாரிப்பாளர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க டேனியல் பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராட்சசன் 2 திரைப்படம் குறித்த தகவல்கள் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.