நாம் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமது கர்ம கணக்கில் சேரும். அந்த வகையில் தானமளிப்பது மிகச்சிறந்த நற்காரியமாகும். ஆனால் நாம் தானமாக கொடுக்கும் பொருட்களின் அடிப்படையில் அதற்கான பலன் இருக்கும். சில பொருட்களை எப்பொழுதும் யாருக்கும் தானமாக கொடுக்ககூடாது, மீறி அப்பொருட்களை தானமளித்தால் அது நம் அதிஷ்டத்தை குறைத்துவிடும். எனவே எந்தெந்த தானமாக வழங்கக்கூடாது என்று அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.
பழைய உணவுகள்:
பழைய உணவுகளை எப்பொழுதும் தானமாக வழங்கக்கூடாது அப்படி வழங்கினால் அது நமக்கு கஷ்டத்தையே கொடுக்கும், வருமானத்துக்கு அதிகமான செலவை ஏற்படுத்தும்.
கிழிந்த துணிகள்:
கிழிந்த துணிகளை எப்பொழுதும் தானமாக வழங்கக்கூடாது. அப்படி கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் துணியை துவைத்து கிழிசலை தைத்தே வழங்க வேண்டும். கிழிந்த துணிகளை தானமாக வழங்குவது துரதிர்ஷ்டத்தை தரும்.
கூர்மையான பொருட்கள்:
கத்தி, கத்திரிக்கோல், ஊசி போன்ற பொருட்களை தானமாக வழங்கக்கூடாது, குறிப்பாக இந்த பொருட்களை இரவலாக கூட மாலை ஆறுமணிக்கு மேல் வழங்கக்கூடாது, இது வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும்.
துடைப்பம்:
துடைப்பத்தை எப்பொழுதும் தானமாக வழங்க கூடாது, குறிப்பாக நாம் பயன்படுத்திய திடைப்பத்தை தானமாக வழங்கக்கூடாது. தொடைப்பத்தை தானமாக வழங்குவது வீட்டில் இருக்கும் இலட்சுமியை தானமாக வழங்குவதற்கு சமமாகும்.
மேலே குறிப்பிட்ட பொருட்களை தானமாக வழங்குவது வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்துவதோடு நமது வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும்.