அஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? பலரும் அறியாத உண்மை

நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது.

தனது ஒரே மைனசாக இருந்த உடல் தோற்றத்தையும் அஜித் இந்த படத்தில் பிளஸ் ஆக்கியிருப்பது கூடுதல் ஈர்ப்பை அளிக்கிறது. அழகான, ஸ்மார்டான நடிகர் என பிரபலங்களே புகழும் நடிகர் அஜித் போல பலரும் ஆகவேண்டும் என பலரும் விரும்புவர்கள்.

ஆனால், அஜித்தோ தன்னை போல ஆகவேண்டாம், எனது வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல என தனது பேட்டிகளில் பலமுறை கூறியுள்ளார்.

ஆம், அஜித்தின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.

1
படிப்பு அவசியம் தான். ஆனால், பள்ளி, கல்லூரிகளில் நீங்கள் புத்தகங்களில் படிப்பது மட்டுமே கல்வி ஆகிவிடாது. பள்ளி படிப்பு தனக்கு ஏறவில்லை என அறிந்ததும். தனக்கு விருப்பமானவற்றில் கவனம் செலுத்தி, அதில் வெற்றிப்பெற நினைத்தார் அஜித்.

2
முதலில் ஒரு கார்மென்ட்-ல் மேர்ச்சண்டைசராக பணியாற்றும் பிறகு சொந்தமாக தொழில் துவங்கி, அதில் நஷ்டம் கண்டு. அதன் பிறகு மெக்கானிக்காக வேலை செய்து, பைக் ரேஸ், மாடலிங் என வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் விடா முயற்சிக்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார் அஜித்.

4
இன்ப, துன்பங்கள் கலந்தது தான் வாழ்க்கை. சில சமயங்களில் நம் வாழ்வில் ஏற்படும் சறுக்கல்கள், அவ்வளவு தான், நாம் இனிமேல் எழவே முடியாது என்ற எண்ணைத்தை அளிக்கும். ஆனால், அதில் இருந்து மீண்டு வருபவன் தான் சரித்திர வெற்றியாளன் ஆகிறான்.

4
முதல் ஓரிரு படங்கள் நடித்து முடித்த போது, எதிர்பாராத விதமாக பெரிய விபத்தில் சிக்கி ஒன்றரை ஆண்டுகள், ஆரோக்கியம், பொருளாதாரம் என இரண்டிலும் பெரும் நெருக்கடிக்கு ஆளானார் அஜித்.

ஆனால், அதையும் தாண்டி, தனக்கு வேலை வேண்டும், தான் செய்யும் வேலையில் நம்பர் 1 இடத்தை பிடிக்காவிட்டாலும், அதில் தோற்றுவிடக் கூடாது என மீண்டு வந்தார் அஜித். அதன் பிறகு தான் ஆசை படத்தில் நடித்து வெற்றி நாயகனாகவும் மாறினார்.

5
நம்பர் 1 என்பது எந்த தொழிலும் நிலையானது அல்ல. ஆனால், நம்பிக்கை, தன்னம்பிக்கை நிலையானதாக இருந்தால், உங்கள் இடத்தை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்பதற்கு அஜித்தை விட சிறந்த எடுத்துக்காட்டு வேறு யாராக இருக்க முடியும்.

6
1996-ல் ஒரு பேட்டியில் அஜித், யாரை கண்டும் வருந்தாதீர்கள், பிறர் வாழ்க்கையுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். பணம், பணம் ஓடி நாம் நமது வாழ்க்கையை பறிகொடுத்து விட வேண்டாம். நமக்கு பின்னால் யாருமே இல்லை, எனவே, உங்கள் வாழ்க்கையை முதலில் அனுபவிக்க பழகுங்கள், பிறகு மற்றவற்றை பார்க்கலாம். என கூறியிருப்பார். இது எல்லா துறை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும், பொருத்தமான வாழ்வியல் கருத்து.

7
உங்களை ஏளனம் செய்து பேச ஆயிரம் பேர், லட்சம் பேர் இருப்பார்கள். காரணம் தேடி பிடித்து உங்களை மட்டம்தட்ட காத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், அவற்றுக்கு செவி சாய்த்தால், நீங்கள் சாய்ந்து விடுவீர்கள்.

உங்கள் பயணத்தில், உங்கள் தன்னம்பிக்கையுடன் நீங்கள் பயணித்து கொண்டே இருங்கள், உங்களை ஏளனம் செய்தவர்கள் காணாமல் போவார்கள், நீங்கள் பார் புகழும் இடத்திற்கு செல்வீர்கள்.

8
வாழ்க்கை என்பது ஒரு தடை தாண்டும் ஓட்ட பந்தையம் போல. பல தடைகள் வந்துக் கொண்டே இருக்கும். நமது எல்லைக் கோடு நிரந்தரமாக இருக்கும் இன்று. சில சமயங்களில் நாம் தடுமாறி, தடம் மாறி கீழே விழுந்துவிடலாம். அதற்காக் ஓய்ந்துவிடாதீர்கள். மீண்டும் எழுந்து ஓடுங்கள். முயற்சி செய்வதை கைவிட்டு தோற்பதை விட, நேர தாமதமாக வெற்றி பெறுவது மேல்.

9
அஜித்தின் வாழ்வில் நடிப்பு ஒரு விபத்து. ஆனால், அவருக்கு பிடித்த வேலை மெக்கானிக். இன்று பல கோடிகளில் ஊதியம் வாங்கும் இவர் இன்றும் கூட தனக்கு பிடித்த மெக்கானிக் வேலையை கைவிடவில்லை.

உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் தான் உங்கள் உயிர்நாடி. அவற்றை மறந்து, இழந்து விட்டு வாழ ஒரு நொடியும் நினைத்து விடாதீர்கள். அடுக்கு மாடியில் பிணமாக வாழ்வதை காட்டிலும், குடிசை வீட்டில் உயிர்ப்புடன் வாழ்வதே சிறந்தது.

10
ஒவ்வொரு மனிதரும் ஒரு பாடம். அனைவரிடம் இருந்தும் நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். ஆனால், எல்லா பாடமும் சிறந்த பாடமாக அமைந்துவிடுவதில்லை. நமது வாழ்க்கை பாடம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ப உழைக்க வேண்டியது நமது கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*