அஜித்தின் 60வது படம் வலிமை. படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இப்போது எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சென்னையில் நடந்து வருகிறது.
இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது எற்கெனவே நமக்கு வந்த தகவல். டிசம்பர் மாதம் படம் குறித்து ஒரு பரபரப்பு வதந்தி, அதாவது படத்திற்கு இசை டி.இமான் என ஒரு புரளி கிளம்பியது.
ஆனால் உடனே படக்குழு தரப்பில் மறுக்கப்பட்டது, இதனால் ரசிகர்கள் குழப்பம் இல்லாமல் இருந்தனர். விருது விழாவிற்கு வலிமை பட இசைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என யுவனிடம் கூற, அதற்கு அவர் மிகவும் உற்சாகமாக காத்திருங்கள், நம்ம தல வருகிறார் என்பது போல் பேசியுள்ளார்.
யுவன் இசை உறுதியானது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.