டேனிஷுக்கு 2.5 வயதுதான் ஆகிறது. ஆனால் அவனால் மற்ற சிறுவர்கள் போல சரியாக சாப்பிடவோ, பேசவோ முடியாது. அவனுக்கு டிரீச்சர் கோலின்ஸ் சின்டோர்ம் Treacher Collins Syndrome இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் முகத்தில் இருக்கும் சில எலும்புகள், திசுக்கள் வளர்ச்சி அடையாமல் இருக்கும். டேனிஷுக்கு கீழ் தாடை மொத்தமாக வளர்ச்சி அடையவில்லை.
டேனிஷ் பிறந்த போது அவனால் பால் கூட குடிக்க முடியவில்லை. அவனுடைய கீழ் தாடையில் பிரச்சனை இருந்ததால், அவனால் பால் குடிக்க முடியவில்லை. வாயை திறந்து எதையும் சப்ப முடியவில்லை. அவன் பால், தண்ணீர் குடித்தால் கூட அவ்வப்போது அது மூக்கு வழியாக வெளியே வந்துவிடும். இதனால் டேனிஷ் ஒரு மாதம் இருக்கும் போது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டான். அப்போது மருத்துவர்கள் இவனை பார்த்துவிட்டு, டேனிஷுக்கு கீழ் தாடையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
ஆனால் இப்போது கீழ் தாடையில் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. 2 வயது வரை கீழ் தாடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. 2 வயதில் சிகிச்சை செய்யலாம் . அதுவரை நீர் ஆகாரம் மட்டுமே கொடுங்கள். திட உணவுகளை டேனிஷ் மெல்ல முடியாது, என்று கூறி உள்ளனர். டேனிஷ் தாடைகள் வளராமல் இருப்பதால் அவனின் உணவுக்குழல் சரியாக வளரவில்லை. இதனால் அவன் மூச்சுக்குழல் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது டேனிஷ் மூச்சு விட முடியாமல் இதனால் கடுமையாக கஷ்டப்படுவான். சமயங்களில் திரவ உணவு கொடுத்தால் கூட அது உணவுக்குழாய்க்கு செல்லாமல், மூச்சு குழாய்க்கு சென்று, இருமல் வந்து, நாள் முழுக்க கஷ்டப்படுவான்.
இந்த சிறிய வயதில் என் மகன் டேனிஷ் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று தெரியவில்லை. அவன் மூச்சு விட கஷ்டப்படும் நேரங்களில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் இன்னும் மோசம். அவனால் வாய் விட்டு அழுக கூட முடியாது. ஏனென்றால் அவனால் வாயை பெரிதாக திறக்க முடியாது, என்று டேனிஷ் அப்பா ஹரிஹரன் கூறியுள்ளார்.
டேனிஷ் 7 மாதம் இருக்கும் போது நிலைமை மோசமானது. அப்போது அவனால் சரியாக மூச்சு விட முடியவில்லை. இதனால் தற்காலிக தீர்வாக, டேனிஷுக்கு Tracheostomy surgery செய்யப்பட்டது. இதன் மூலம் டேனிஷ் கழுத்தில் சிறிய துளை இடப்பட்டு, மூச்சு குழல் உடன் சிறிய குழாய் இணைக்கப்பட்டது. இந்த குழாய் மூலம் அவன் எளிதாக சுவாசிக்க முடியும். 1.3 மாதமாக அவன் இந்த குழாய் உடன்தான் இருக்கிறான். இந்த சிகிச்சை செய்யவே 5 லட்சம் செலவானது. டேனிஷ் அம்மா செல்வி தன்னுடைய நகைகளை மொத்தமாக விற்றுவிட்டார்.
இதையடுத்து ஒரு வருடத்திற்கு முன் டேனிஷ் மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது டேனிஷுக்கு உடனடியாக கீழ் தாடையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சீக்கிரம் செய்தால்தான் அவனை காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டனர். சிகிச்சைக்கு, 5,25,000 ரூபாய் செலவாகும் என்று கூறிவிட்டனர்.
டேனிஷ் குடும்பம் மிடில் கிளாஸ் குடும்பம். அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாது. கடந்த 10 மாதமாக இவர்கள் சிகிச்சைக்காக உதவி கிடைக்குமா என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கடைசி வாரம் கூட டேனிஷ் கடுமையான இருமல் மற்றும் ஜலதோஷம் காரணமாக பாதிக்கப்பட்டான்.
இதனால் அவனுடைய கழுத்தில் உள்ள டியூப் உரசி அதில் இருந்து ரத்தம் கூட வந்தது. அவனுக்கு நிரந்தர அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே முழுதாக காக்க முடியும். டேனிஷ் அப்பா மாதம் 25 ஆயிரம் ரூபாய்தான் சம்பாதிக்கிறார். அதுவும் கூட டேனிஷுக்கு Tracheostomy டியூப் மாற்ற மாதம் 8 ஆயிரம் என்று செலவாகிவிடுகிறது.
டேனிஷ் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் டேனிஷ் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள்.
நீங்கள் கொடுக்கும் 100 ரூபாய் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும்.
இந்த குழந்தைக்கு உதவி செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்..
https://www.edudharma.com/fundraiser/helpdanish
நீங்கள் நேரடியாக இந்த குழந்தையின் வங்கி கணக்கில் உதவியை செலுத்த விரும்பினால் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பவும்..
Bank Name: Yes Bank
Account number: 2223330016169841
Account name: Mrs selvi hariharan
IFSC code: YESB0CMSNOC
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!