மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் தான் வலிமை. இந்திய சினிமாவையே மிரட்டும் விதமாக போலீஸ் அதிகாரியாக தல அஜித் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக தல அஜித் தன்னை தானே வருத்திக் கொண்டு ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்து தன்னை மேலும் மெருகேற்றி வருகிறார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி டெல்லியில் துவங்க உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள், பைக் மற்றும் கார் சேசிங் காட்சிகள் அதிகமாக இருக்கிறதாம். இந்த காட்சிகளை படமாக்குவதற்காக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கார் சேசிங் காட்சிகளை வடிவமைத்த பென் காலின்சும் வலிமை படத்தில் இணைந்து உள்ளார்.
பொதுவாகவே வினோத் படங்களை பொறுத்தவரை திரைக்கதை தத்ரூபமாக வேறு லெவலில் இருக்கும். அந்த வகையில் இப்போது வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகளையும் தத்ரூபமாக வினோத் திட்டமிட்டு உள்ளார். மேலும் ரிஸ்கான ஆக்ஷன் காட்சிகளுக்கு தல அஜித்துக்கு டூப் போட்டு படமாக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் வினோத்.
இது குறித்து தல அஜித்திடமும் பேசியுள்ளார் வினோத். ஆனால், தல அஜித் வினோத்தின் இந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளார். எவ்வளவு ரிஸ்கான காட்சிகளாக இருந்தாலும் தல அஜித் ரசிகர்களுக்காக டூப் போடாமல் தான் நடிப்பார். அப்படி நடிக்கும்போது பல தடவை தல அஜித்துக்கு விபத்துகளும் நடந்துள்ளது.
ஆனாலும் தல அஜித் தன்னைத்தானே வருத்திக்கொண்டு ரசிகர்களுக்காக இப்போதுவரை டூப் போடாமல் தான் நடித்து வருகிறார்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பில்லா படத்தில் ஹெலிகாப்டர் சீன், வீரம் படத்தில் டிரைன் சீன், மங்காத்தா படத்தில் கார் சேசிங் சீன் என பல படங்களில் தல அஜித் தன் உயிரையே பணயம் வைத்து டூப் போடாமல் தான் நடித்து உள்ளார்.
அந்த வகையில் இப்போது மீண்டும் தன் உயிரை பணயம் வைத்து வலிமை படத்தில் வரும் ரிஸ்கான காட்சிகளை தல அஜித் டூப் போடாமல் தான் நடிக்க இருக்கிறாராம். தல அஜித்தின் இந்த முடிவு வினோத் மற்றும் வலிமை படக் குழுவினரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. சரி, வலிமை படத்தில் டூப் போடாமல் நடிக்க இருக்கும் தல அஜித்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?