சிவனுக்கு இந்த பொருட்களைக் கொண்டு ஒருபோதும் வழிபடாதீங்க…

சில பொருட்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை வைத்து வணங்கும்போது சிவபெருமான் குளிர்ந்து வேண்டுவதை அருளுவார். அதேபோல சிவனுக்கு பிடிக்காத சில பொருட்களை வைத்து வழிபட்டால் நமது அழிவு நிச்சயம்.

அந்த வகையில் எந்தெந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வணங்கினால் ஆபத்து என்பதை இங்கே பார்க்கலாம்.

சிவனுக்கு பிடிக்காதவை
கேதகி மலரை ஒருபோதும் சிவனுக்கு வைத்து வணங்கக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் சிவனை கேதகை மலரை கொண்டு வழிபடாதீர்கள்.

சிவபெருமானுக்கு துளசியை வைத்து வழிபடாதீர்கள் பிறகு ஈசனின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

சிவபெருமானுக்கு தேங்காயை வைத்து வழிபடலாம் ஆனால் தேங்காய் நீரை படைக்கக்கூடாது.நாம் அருந்த கூடிய பொருளான தேங்காய் தண்ணீரை சிவனுக்கு படைப்பது பாவத்தின் உச்சமாகும்.

சிவலிங்கத்தின் மீது மஞ்சளை ஒருபோதும் பூசக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பண்டையகாலம் முதலே பெண்களின் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதலால் அதனை புனிதமான சிவபெருமானின் லிங்கத்தினம் மீது பூசக்கூடாது.

பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் அதிகரிக்க வேண்டுமென குங்குமத்தை நெற்றியில் திலகமாய் இடுவார்கள். சிவபெருமான் அழிக்கும் கடவுளாவார். எனவே ஈசனின் அடையாளமான சிவலிங்கத்திற்கு குங்குமத்தை வைத்து வழிபடக்கூடாது.

சிவனுக்கு பிடித்தவை
பசும்பால் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். பன்னீர் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சருமம் பாதுகாக்கும்.

பசுந்தயிர் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மகப்பேறு வாய்ப்பு கிடைக்கும். பஞ்சா மிருதம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் பலம், வெற்றி உண்டாகும்.

தேன் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சுகமளிக்கும், சங்கீத விருத்தி கிடைக்கும். நெய் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் முக்தி அளிக்கும்.

சர்க்கரை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் எதிரியை ஜெயிக்கும் ஆற்றல் கிடைக்கும். இளநீர் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நல்ல சந்ததி அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*