வெண் புள்ளியிலிருந்து விடுதலை!

மனித இனத்தை பாதித்து வருகின்ற பல நோய்களில் தோலின் மேற்பகுதியில் ஏற்படும் வெண் புள்ளிகளையும் சேர்க்கலாம். மேலை நாட்டு மருத்துவத்தில் இந்தக் குறைபாட்டிற்கு நிவாரணியில்லை. ஆனால் தொன்றுதொட்டு மனிதர்களை பாதித்து வரும் வெண் புள்ளிகளுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது.

சரக் வைத்தியர் என்பவர் தான் இந்த நோய்க்கு முதல் முதலாக மருத்துவத்தை கொண்டு வந்தார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு களாக இந்த நோய்க்கு ஆயுர்வேதம் அரியதொரு தீர்வை தந்திருக்கிறது. இந்த நோய் பாதித்தவர்கள் பலரும் முழுமையாக குணமடைந்து விட்டார்கள். பலர் குணமடைந்து வருகிறார்கள்.

குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த வைத்தியர் ரமேஷ் நாயுடு தன்னுடைய வைத்தியத்தால் 27 ஆண்டுகளுக்கு மேலாக வெண்புள்ளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார். இவரின் வைத்தியம் மூலம் பல்லாயிரக்கணக் கானோர் குணமாகி உள்ளனர்.

இந்த நோயின் அடிப்படை காரணம் என்ன? – நமது உடலில் வைட்டமின் பி, ஹீமோகுளோபின், ரத்தம் இவை போதுமான அளவில் இல்லாதபோது இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய் எந்த வயதினரையும் தாக்கலாம். இந்த நோய் குணமாவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. குணமாவது நோயாளியின் வயது, நோயின் தீவிரம், உடல்நிலை மாறுபாடு, மனஅழுத்தம் என்ற பல அம்சங்களை சார்ந்தது. கபம், பித்தம், வாதம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பொறுத்து நோயின் நிலை மாறுபடும். இந்த மாற்றங்கள் சமன்பாட்டில் இருக்க வேண்டும். இவை ஏறுமுகமாக இருக்குமாயின் சருமத்தில் வெண் புள்ளிகள் தோன்றுகின்றன.

உணவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்த வெண்புள்ளிகளை குணப்படுத்த முடியுமா? – கொய்யா, ஆரஞ்சு பழங்கள் உண்ணுவதை குறைக்க வேண்டும். மேலும் ஸ்வீட் லைம், கருப்பு திராட்சை, பச்சை வாழைப்பழம், முள்ளங்கி, பூசணிக்காய், மீன், கோழிக்கறி, முட்டை, உளுத்தம் பருப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள், புளி இவைகளை முடிந்த அளவிற்கு நமது உணவு பட்டியலில் இருந்து குறைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வேகவைத்து உணவில் சேர்க்க வேண்டும். செவ்வாழை, மாதுளம்பழம், பப்பாளி, பொன்னாங்கன்னி கீரை, வெந்தயம், சுரைக்காய், கருப்பு மூக்கடலை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைத்தியர் ரமேஷ்நாயுடு சொந்தமாக மருந்து தயாரிக்கிறார். இந்த மருந்து 24 மணி நேரத்திற்குள் மாறுபாட்டை கொண்டு வரும். வைத்தியர் ரமேஷ்நாயுடு இந்த மருத்துவ சேவையில் கடந்த 27 ஆண்டு காலமாக ஈடுபட்டிருக்கிறார்.

வெண்புள்ளிகள் சருமத்தில் தோன்றுவதை தொழுநோயாக கருதுவது தவறு. இது தொடர் சிகிச்சையால் குணமாகும் தன்மை உடையது. தென்னிந்தியர்கள் இந்த நோயைபற்றி போதுமான அளவில் தகவல் பெற்றிருக்கவில்லை. இது பரம்பரை நோய் அல்ல. நூறில் ஒருவருக்குத்தான் இந்த நோயின் பாதிப்பு இருக்கிறது. அலோபதி மருத்துவத்தில் இந்த நோய்க்கு இதுவரையிலும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. ஆயுர்வேதம் ஒன்று தான் இந்த நோயை குணப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு வைத்தியர் ரமேஷ் நாயுடு, பாக்கம் கிராமம் மற்றும் அஞ்சல், குடியாத்தம் தாலுகா, வேலூர் மாவட்டம் – 632 602. போன்: 9865415652, 9994486669

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*