கிருஷ்ணர் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராவார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ணனின் மந்திரங்களை உச்சரிப்பது, கலியுகத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வழிசெய்யும் செயலாகும். நீண்டகாலமாக குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியர்கள் குருவாயூர் சென்று வழிபட்டு வந்தால் கிருஷ்ணரின் அருளால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ச்சியாக கிருஷ்ணா ஜெயந்தி விரதமிருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதியில் கிருஷ்ணனை நினைத்து விரதமிருப்பது கைகண்ட பலனை அளிக்கும்.
குழந்தைபேறு வேண்டி நீண்ட காலமாக காத்திருப்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும், குழந்தையின் பாதங்களை போல் வீட்டு வாசலிலிருந்து குழந்தையின் கால்களை போல் மாக்கோலம் வரையவேண்டும், பூஜை அறையில் விளக்கேற்றி கிருஷ்ணனுக்கு வெண்ணை பிரசாதம் படைக்க வேண்டும், கிருஷ்ணனின் அவதாரத்தை விவரிக்கும் பாகவதத்தின் பத்தாவது அத்யாயத்தை படிக்க வேண்டும். நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாட வேண்டும். கிருஷ்ணனுக்கு படைத்த நெய்வேத்யத்தை அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இதனால் குழந்தைகள் மகிழ்வர் அந்த குழந்தைகளின் வாழ்த்து குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேற்றை அளிக்கும். இரவு கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று கணவன் மனைவி இருவருமே விரதமிருந்து இரவில் கண்விழித்து கிருஷ்ணனை பூஜித்து கண்விழித்து கிருஷ்ணனின் வரலாற்றை கேட்கவேண்டும். மறுநாள் மீண்டும் பூஜைகளை செய்து அன்னதானம் வழங்கி விரதத்தை முடிப்பது மிகவும் சிறந்ததாகும்.