இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்

ஸ்மார்ட் போன்களை அழைப்பை தாண்டி எப்போது ப்ரைவஸி என்ற சொல்லுக்குள் அடக்கி பயன்படுத்த முயன்றோமோ. அப்போது ஸ்மார்ட் போன்களால் ஆன ஆபத்து தொடங்கிவிட்டது. அதில் இருந்து எவ்வளவு நம்மை தற்காத்துக் கொள்ள முடியுமோ, அதை செய்வது நல்லது. செயலிகள் தயாரிக்கும் போது அது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தோடு தயாரிக்கப்படுகிறதே தவிர அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதில்லை.

ஸ்மார்ட் போன்களில் செயலிகள் பதவிறக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒருசில செயலிகள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது என்பதை அறிந்திருப்போம். ஆனால் நாம் அத்தியாவசியமாக பயன்படுத்தும் செயலிகளே பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது என்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து சில பாதிப்புகள் தொடர்ந்து இருந்து வந்துள்ளதாகவும் அந்த செயலிகளின் பட்டியலையும் செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யாகூ பிரவுசர் போன்ற பிரபலமான ஆன்ட்ராய்டு செயலிகளிலும் அதிக பாதிப்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த பட்டியலில் நூற்றுக்கணக்கான செயலிகள் இருந்தாலும் கூட முக்கியமான சில செயலிகளின் பட்டியலை அந்த நிறுவனம் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர், சேர் இட் இந்த மூன்று செயலிகளும் இல்லாத ஸ்மார்ட் போன் மிகவும் சொர்ப்பம். ஆனால் இந்த அனைத்து செயலிகளிலும் அதிகப்படியான பாதிப்பு இருப்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த செயலிகள் மூலம் தனிநபர் தகவலுக்கே ஆபத்து ஏற்படலாம்.

யாஹூ செயலியானது 10,000,000 பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. மோட்டோ வாய்ஸ் செயலியானது 10,000,000 பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. லைவ் எக்ஸ் லைவ் செயலியானது 50,000,000 பதிவிறக்கங்கள் கொண்டுள்ளது. இந்த செயலிகளிலும் அதிகப்படியான ஆபத்துகள் இருப்பதை நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த அனைத்து செயலிகளிலும் vulnerable library என்று அழைக்கக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர் இருப்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மொபைல் லெகன்ட், ஸ்முலே, ஜூக்ஸ் மியூஸிக் இந்த செயலிகளும் அதிகப்படியான மொபைகளில் இருப்பதை கண்டறிந்திருப்போம். ஆனால் இதுவும் ஆபத்தான செயலிகளே என கண்டறியப்பட்டுள்ளது.

வீ சேட், அலி எக்ஸ்பிரஸ், வீடியோ எம்பி2 கன்வெர்டர் இந்த ஆப்கள் அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலிகள் தான் எனவே இதை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்வது நல்லது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லஜாடா, விவா வீடியோ, ரெட்ரிகா, டியூன் இன் இந்த செயலிகளில் பெரும்பாலானவை 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த செயலிகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதை செக் பாயண்ட் ரிசர்ச் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*