எக்காரணம் கொண்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் எந்த ஒரு நாளிலும் வருகிற சனி ஹோரை சமயங்களில் அடமானம் வைப்பது, கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த சனி ஹோரை நேரத்தில் உங்களின் பழைய கடன்களை அடைப்பதால் மீண்டும் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது.
அடகு வைக்கும் போதோ, கடன் பெற முயற்சிக்கும் போதோ அன்றைய தினம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பகையான தினமாக இல்லாதவாறு பார்த்து கொண்டு செல்லுதல் நல்லது. நீங்கள் பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடன் தொகையில் வட்டியை மட்டுமோ அல்லது வட்டியுடன் அசல் தொகையையோ மாதத்தில் வரும் கிருத்திகை, கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களிலும், தேய்பிறை நாட்களிலும் திருப்பி செலுத்துவதால் நீங்கள் வருங்காலங்களில் மீண்டும் கடன் வாங்கும் சூழலோ, வீடு, நகைகளை அடமானம் வைக்கும் நிலை ஏற்படாது.
இவை எல்லாவற்றையும் விட நாம் வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைப்பதற்கு ஒரு சிறந்த காலம் தான் மைத்ர முகூர்த்த நேரம் ஆகும். இந்த மைத்ர முகூர்த்த நேரம் என்பது செல்வக் கடவுளான லட்சுமி தேவி மற்றும் குபேர பகவானின் அருட்கடாட்சம் நிறைந்த ஒரு நேரமாக கருதப்படுகிறது. எனவே இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் மிகுதியாக கடன் வாங்கியவர்கள் தாங்கள் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகையில் ஒரு பகுதியை மட்டும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுத்து உங்களின் கடன் அடைக்கும் முயற்சியை மேற்கொள்வதால் நீங்கள் அதிகளவு கடன் வாங்கியிருந்தாலும், மிக விரைவாக அவற்றை கட்டி தீர்த்துவிடுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அனைத்து கிழமைகளிலும் இந்த மைத்ர முகூர்த்த நேரங்கள் வருகிறது என்றாலும் செவ்வாய்க்கிழமை அன்று வருகின்ற மைத்ர முகூர்த்த நேரத்தில் உங்கள் கடனை திருப்பிச் செலுத்துவது மிகச்சிறந்த பலன்களை உங்களுக்கு கொடுக்க வல்லதாக இருக்கும். கீழே இந்த வருடத்தில் மீதமிருக்கும் மாதங்களில் வரவிருக்கின்ற மைத்ர முகூர்த்த தினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை
8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை
24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை
மேற்கூறிய மைத்ர முகூர்த்தம் ஏற்படும் தினங்களில் அந்த நேரத்தில் உங்களின் கடன் தொகையில் ஒரு பகுதியை கடன் அளித்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தி, மிக விரைவில் கடன் இல்லாத வாழ்க்கை உண்டாகி இன்பமாக வாழலாம்.