சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடியது புற்றுநோய். கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயினால் உயிரிழந்திருக்கின்றனர். உணவு, வாழ்க்கை முறை, மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை புற்றுநோய்க்கான காரணமாக சொல்லப்படுகிறது. அணுக்களின் உற்பத்தி பணியின்போது டி.என்.ஏ-க்களில் ஏற்படும் முறையற்ற மாறுபாடுகளால் புற்றுநோய் உருவாகக்கூடும். இப்படி உருவாகும் புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் மிகக்கொடிய ரத்தப் புற்றுநோயால் 4 வயதேயான சத்யபிரியா பாதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சை உலுக்கும் சிரிப்பு
கிரண் திருநகரி – 4 வயதான சத்யபிரியாவின் தந்தை. வங்கியில் கடன் வாங்கினவர்களிடம் இருந்து பணத்தைப் பெறும் கலெக்ஷன் ஏஜென்டாக இருக்கிறார். கிரணின் தேவதை சத்யபிரியா. பணியில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாலும், வீட்டில் தனது மகள் உதிர்க்கும் மழலைச் சிரிப்பு கிரணின் அவ்வளவு கஷ்டங்களையும் போக்கிவிடும். சத்யபிரியாவின் சிரிப்பு, பேச்சு, நடனம் என பார்ப்பவர் யாராலும் அவளை உச்சிமோர்ந்துவிட்டு செல்லாமல் இருக்க முடியாது. அவளுடைய சிரிப்புக்குகே கவலைகள் அத்தனையும் ஓடிவிடும்.
சோர்வாகும் நேரம் மனதை குதூகலத்துடன் வைக்கும் சத்யபிரியாவின் சிரிப்பு தற்போது நெஞ்சை உலுக்குவதாக அமையும்படி விதி விளையாடிக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சத்யபிரியாவை அருகிலுள்ள பல மருத்துவமனைகளுக்கு அவளது பெற்றோர் அழைத்துச் சென்றனர். கடைசியாக ஒரு மருத்துவமனையில் அவளுக்கு ரத்தப் பரிசோதனை உள்பட பல சோதனைகள் நடத்தப்பட்டது.
பாதிக்கிணறு…
சோதனைகளின் முடிவில் மருத்துவர், சத்யபிரியா ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரத்தப் புற்றுநோயின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் நோயை விரைந்து குணமாக்க முடியும் என்றும் தெரிவித்தார். துயரத்தில் குடும்பம் ஆழ்ந்திருந்தாலும் சத்யபிரியாவை எப்படியாவது காப்பாற்றும் முனைப்புடன் அவளது பெற்றோர் போராடினர். உறவினர்கள், நண்பர்கள், சேமிப்பு என 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சத்யபிரியாவுக்கு கீமோதெரபி செய்யப்பட்டு வந்தது.
இப்போது வரை நான்கு முறை கீமோதெரபி செய்தாகிவிட்டது. இன்னும் 2.5 வருடங்கள் இதேபோல் தொடர்ந்து கீமோதெரபி செய்தாக வேண்டிய நிலைமையில் சத்யபிரியா இருக்கிறாள். இப்படி தொடர்ந்து சிகிச்சை பெறும் பட்சத்தில் சத்யபிரியா முழு குணமடைய வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது நோயின் பிடியில் இருந்து பாதிக்கிணறைத் சத்யபிரியா தாண்டிவிட்டாள். முழுக்கிணறைத் தாண்டி நோயில் இருந்து விடுபட இன்னும் ரூ. 5 லட்சம் தேவையாக இருக்கிறது.
Edudharma
ஏற்கனவே கடன் சுமை அதிகரித்துவிட்டதால், கிரண் தற்போது உதவியற்ற நிலையில் உள்ளார். மகளின் கவலை தோய்ந்த சிரிப்பு நெஞ்சில் ஆறா வடுவாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நிதி திரட்டும் இணைய நிறுவனமான ‘Edudharma’ சத்யபிரியாவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் உதவிக்கரம் நீட்டியுள்ளது. சத்யபிரியாவைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். நாம் செய்யும் சிறிய உதவி, அந்த நோயில் இருந்து அவளை முழுவதுமாக கடந்துச் செல்ல உதவும் என்பதில் பொய்யேதுமில்லை. நாம் மட்டுமின்றி நம்முடன் நம்மைச் சேர்ந்தவர்களும் இணைந்து உதவிக்கரம் நீட்ட வழிவகுப்போம். தானம் செய்வோம்!
சத்யபிரியாவுக்கு உதவி செய்ய இந்த லின்க்கை கிளிக் செய்யவும்
https://www.edudharma.com/fundraiser/support-4-year-old-sathyapriya-recover-from-blood-cancer