குருப்பெயர்ச்சி 2019 : குரு பார்வையால் கோடி அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

0
238

2019-ம் ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விகாரி வருடம் அக்டோபர் 29-ம் தேதி நடக்க இருக்கின்றது. விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை 9.30-க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் மாறுகிறார். அந்தவகையில் இந்தாண்டு குருப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் – செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு தனுசு ஒன்பதாவது ராசி. ஐந்தாம் பார்வையாக குரு உங்க ராசியை பார்க்கிறார். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகமாகும். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீடு, பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டினை பார்க்கிறார். பெயர் புகழ் கிடைக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளால் அதிக நன்மைகள் நடக்கும்.

ரிஷபம் – சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்கு குரு எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்தில் இருந்து உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, 12ஆம் வீடுகளைப் பார்க்கிறார். இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம். கையில் பணம் அதிகமாக வரும். நான்காம் வீட்டினை குரு பார்ப்பதால் சொந்தமாக வீடு வாங்கலாம். வண்டி வாகனம் வாங்கலாம். மோட்ச ஸ்தானம் 12ஆம் வீடு மனதில் நிம்மதி ஏற்படும். வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.

மிதுனம் – புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. ஏழாம் வீட்டில் அமரும் குரு உங்க ராசியையும் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தையும் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தை பார்க்கிறார். குரு பார்வையால் தன்னம்பிக்கை தைரியம் கூடும். எதையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

கடகம் – சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு அமரப்போகிறார். அங்கிருந்து குரு இரண்டாம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். இதுநாள் வரை பட்ட கடன்களை அடைக்க உதவி செய்வார். போட்டி பந்தையங்களில் வெற்றியை தருகிறார். பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் இருந்த நெருக்கடி தீரும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். குரு 12ஆம் வீட்டினை பார்க்கிறார். சுப செலவுகள் ஏற்படும். வெளிநாடு செல்ல விமானத்தில் பறப்பீர்கள்.

சிம்மம் – சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு குரு அற்புத பலன்களை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசி லக்னத்தின் மீது விழுகிறது. தைரியம் அதிகரிக்கும் ஆரோக்கியம் கூடும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பது அதிர்ஷ்டம். வெளிநாட்டு யோகம் வரப்போகுது. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி அமையும். உங்க லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். காரியங்களில் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும்.

கன்னி – புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே நான்காம் வீட்டில் இருந்து குரு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீடுகளை பார்க்கிறார். பணவரவும் அதிகம் இருக்கும். செலவுகள் கட்டுப்படும். எட்டாம் வீட்டினை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் அதிகமாகும் கண்டங்கள் விலகும். அவமானங்கள் தீரும் இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். 12ஆம் வீட்டினை பார்ப்பதால் சுப விரையங்கள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான அழகு பொருட்களை வாங்கி வீடுகளை அழகுபடுத்துவீர்கள். நன்மை தரும் குரு பார்வை இதுவாகும்.

துலாம் – சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்கு குரு மூன்றுக்கு உடையவன் மூன்றாம் வீட்டில் அமரப்போகும் குருவின் நேரடி பார்வை உங்க ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. தடைபட்ட திருமணம் நடைபெறும். குரு பார்வை பாக்ய ஸ்தானத்தின் மீது விழுவதால் ஆரோக்கியமும் சுபிட்சமும் அதிகரிக்கும். அப்பாவிற்கு நன்மை கிடைக்கும். ஆலயங்களுக்கு புனித பயணங்கள் செல்வீர்கள். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல நண்பர்கள் தேடி வருவார்கள். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் வீட்டு கதவைத் தட்டப்போகிறது. பயப்பட வேண்டாம்.

விருச்சிகம் – செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகத்திற்கு ஜென்ம குரு இப்போது இரண்டாம் வீட்டிற்குப் போகிறார். குரு பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீட்டின் மீது விழுகிறது. கடன் நோய்கள் தீரும். உடல் வலிமையை அதிகரிக்கும். நோயற்ற வாழ்க்கையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். கடன் தொந்தரவு, எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தை குருபார்ப்பதால் தடைகள் விலகும் கண்டங்கள் நீங்கி ஆயுள் கூடும். பத்தாம் வீட்டினை குரு பார்ப்பதால் நிரந்தர வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.


தனுசு
– தனுசு ராசிக்காரர்களுக்கு குரு அதிபதி. ஜென்ம குரு தனது ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளை பார்க்கிறார். குரு பார்வையால் திருமண தடை ஏற்பட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். புகழும் கிடைக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமண தடைகள் நீங்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும் உற்சாகம் சந்தோஷம் ஏற்படும். ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு பயணம் செல்வீர்கள். அப்பாவிற்கு உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும்

மகரம் – சனியை அதிபதியாகக் கொண்ட மகரத்திற்கு 12ஆம் வீட்டு அதிபதி குருபகவான். மோட்ச ஸ்தான அதிபதி குரு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளை பார்க்கிறார். நான்காம் வீடு சுகஸ்தானம், உயர் கல்வி, தாய் ஸ்தானம் இந்த வீட்டினை குரு பார்ப்பதால் புதிய வண்டி வாகனங்கள் வாங்கலாம். ஆறாம் வீட்டினை குரு பார்ப்பதால் கடன்கள் தீரும் நோய்கள் விலகி ஆரோக்கியம் அதிகரிக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். எட்டாம் வீட்டினை குரு பார்ப்பதால் கண்டங்கள் நீங்கும் ஆயுள் கூடும் நிம்மதி ஏற்படும்.

கும்பம் – சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பத்திற்கு லாப குருவாக 11ஆம் வீட்டில் பலமான குருவாக அமர்கிறார். திருப்புமுனையை ஏற்படுத்தும் குரு பெயர்ச்சி. உங்க ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடுகளை குரு பார்க்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தைரியம் கூடும், முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். திருமணம் தட்டிப்போனவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

மீனம் – குருபகவான் உங்க ராசிக்கு அதிபதி. குரு பத்தாம் வீட்டிற்கு வருவதால் நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. நிறைய பணவரவு கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வருகிறது. நிறைய பணவரவு இருக்கும். கடன்கள் அடைபடும். நோய் நொடிகள் தீரும் ஆரோக்கியம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமும் உற்சாகமும் இருக்கும் வீடு சொத்துக்களை வாங்குவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here