கண்டச்சனி காலம் இது? யாரையெல்லாம் சனி ஆட்டிப்படைக்க போகிறாரோ? யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஆயுள் காரகனான சனியால் சச யோகம் உண்டாகுவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார். அது மட்டுமின்றி சமுதாயத்தில் கௌரவம் மிக்க பதவிகளை அடையும் உண்டாகும். இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சனி கேந்திரத்தில் தனித்து சுபர் அல்லது அசுபர் பார்வை சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.

சனிபகவான் 12 ராசிகளை கடக்க 30 ஆண்டுகாலம் ஆகிறது. இதில் துலாம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே கிடைக்கும். சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும்.

2020 முதல் 2025 வரை பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்சமாக புருஷ யோகமான சசமகாயோகம் அமையப்போகிறது.

2020 ஆண்டு ஜனவரி மாதம் முதல் சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இது மேஷம் ராசி லக்னத்திற்கு பத்தாவது இடமாகும். 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மேஷ ராசி லக்னத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சசயோகமாக அமையப்போகிறது. கேந்திரத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வது அற்புதமான யோகமாகும்.

நல்ல வேலை கிடைக்கும். கோச்சார ரீதியாக சனி பகவான் நல்ல யோகத்தை தருவார். ஆளுமை தன்மையுடன் இருப்பார்கள். கடல் கடந்து செல்லும் யோகம் வரும். படிப்பு வேலைக்காக வெளிநாடு செல்வார்கள். பெண்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில் தொடங்குவார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு சனி யோக காரகர் இல்லாவிட்டாலும் இந்த சனிப்பெயர்ச்சி சசமகா யோகத்தை தரப்போகிறது. கடகம் ராசி, கடக லக்னகாரர்களுக்கு சனி ஏழாம் வீட்டில் அமைவது கண்டச்சனி காலம் என்றாலும் சனி பகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் இது சசமகாயோகமாக அமைகிறது.
2020 ஜனவரி சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கடக ராசி கடக லக்னத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அற்புதமான தருணமாக அமையும். நிர்வாகத்திறன், தலைமை பதவியை ஏற்க வைப்பார். கோச்சாரரீதியாக சனி வருபவர்களுக்கும் உயர்பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமைப் பதவி, அரசருக்கு ஒப்பான பதவியையும் யோகத்தையும் தேடித் தரும்.

சனிபகவான் துலாம் ராசி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் அமரப்போகிறார். இது சசமகாயோகம் அமைப்பாகும். சனிபகவானின் பத்தாவது பார்வை துலாம் ராசியின் மீது விழுகிறது. நினைத்தது நிறைவேறும். இதுநாள்வரை வம்பு வழக்குகள் என்று இருந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அற்புதமான பல நல்ல பலன்களைத் தரப்போகிறார். எதிரிகள், கடன்கள், நோய்கள் பிரச்சினைகள் தீரும். ஆட்சி பெற்ற சனியால் பலம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றமும் மாற்றங்களும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு யோக ஜாதகமாக அமையும்.

துலாம் ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நீதித்துறையில் தலைமைப் பதவி தேடி வரும். அரசியல் அரசாங்க துறையில் நல்ல பதவியில் அமரும் அளவிற்கு வளர்ச்சி அடைவார்கள். மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல்மாணவராக தேர்ச்சியடையும் யோகம் வரும். வேலை, தொழில் அற்புதமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*