கார்த்தியின் கைதி திரைவிமர்சனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ளது கைதி. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, லவ் ரொமான்ஸ் எதுவுமே இல்லை என்றுதான் படகுழுவே இந்த படத்தை விளம்பரப்படுத்தியது. இப்படி வித்யாசமாக எடுக்கப்பட்டுள்ள கைதி படம் எப்படி இருக்கு? வாங்க பார்ப்போம்.

போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பெரிய அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்து அதை ரகசிய இடத்தில் வைக்கிறது போலீஸ். நரேன் தலைமையிலான டீம் தான் அதை செய்கிறது. அதை எப்படியாவது மீட்க வேண்டும் என அதிக அளவில் ஆட்களை அனுப்புகிறது வில்லன் கேங்.

அந்த சமயத்தில் 10 வருடங்கள் ஜெயிலில் இருந்த கார்த்தி தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என வெளியில் வருகிறார். ஆனால் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ். அதன்பிறகு மொத்த போலீஸ் அதிகாரிகளும் ஒரு சூழ்ச்சியில் சிக்கி உயிர்பிழைக்கவே போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கார்த்தி உதவினால் தான் அவர்களை காப்பாற்ற முடியும் என்கிற நிலை.

கார்த்தி அவர்களுக்கு எப்படி உதவினார், அதில் வரும் தடங்கல்களை எப்படி சமாளித்தார், மகளை பார்த்தாரா? என காட்டியுள்ளது மீதி படம். மொத்த படத்தையும் தாங்கி நிற்பது கார்த்தி மட்டும்தான். மகளை முதல் முறையாக பார்க்க போகிறோம் என்கிற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாக, மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என பேசும் அப்பாவாக பல காட்சிகளில் நடிப்பில் ஜொலித்துள்ளார். நரேன் அந்த போலீஸ் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

கார்த்தியின் மகளாக நடித்துள்ள பேபி மோனிகா கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் இரண்டாவது ஹீரோ லோகேஷ் கனகராஜின் திரைக்கதை தான். ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை த்ரில்லாகவே வைத்திருக்கிறது. படம் முழுக்க ஆக்க்ஷன் தான் என்றாலும், இடையிடையே செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் குறைவில்லை.

படம் முழுக்க முழுக்க இரவில் நடப்பது போல இருக்கிறது. இத்தனை சீன்களையும் சண்டை காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். சாம் CSன் பின்னணி இசை. படத்தில் எந்த பாடல்களும் இல்லை என்பதால் படம் முழுக்க பின்னணி இசையில் தன் திறமையை காட்டியுள்ளார்.

ரியலாக வடிவமைக்கப்பட்டிருந்த சண்டை காட்சிகள். அழுத்தமில்லாத வில்லன் கதாப்பாத்திரங்கள். நான்கு வில்லன்கள் இருந்தாலும் அன்பு என்ற ரோலில் நடித்தவரை தவிர மற்றவர்களுக்கு அதிகம் அழுத்தம் இல்லை. மெயின் வில்லனுக்கும் கார்த்திக்கும் என்ன சப்பந்தம் என்பதையே இரண்டாம் பாகத்திற்கு ஹிண்ட்டாக கொடுத்துள்ளனர்.

சில இடங்களில் மிக மெதுவாக நகரும் திரைக்கதை. படம் எந்த ஓவர் பில்டப் மாஸ் காட்சிகளும் இல்லாமல் படு ரியலாக எடுக்கப்பட்டிருந்தாலும் அங்கங்கே இருக்கும் சில லாஜிக் குறைகளும் உள்ளன. பிரிட்டிஷ்காரன் செய்த கதவு ஜன்னல் என்றால் உடைக்கவே முடியாத என்ன?

மொத்தத்தில் ‘கைதி’ கார்த்திக்கு அடுத்த வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*