பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டாலும், உள்ளே சென்ற போட்டியாளர்களுக்கு உருவாகிய ஆர்மியினர் இன்னும் வெறித்தனமாகவே இருந்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர். அதிலும் வீ ஆர் தி பாய்ஸ் என்ற பாடல் தற்போது படுபயங்கரமாக வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தர்ஷன் மற்றும் அவரது காதலி, சாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது மேடையில் பேசிய சாண்டி 5 ஸ்டார் டீமில் மீதம் இருப்பவர்களின் நிலையினைக் கூறியுள்ளார்.
அதில் முகேன் மலேசியா சென்றுவிட்டதாகவும், லொஸ்லியா வெளிநாடு சென்றுவிட்டதாகவும், இன்னொருத்தன் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆக மொத்த கவினுக்கு படவாய்ப்பு கிடைத்துள்ளதை சாண்டி தற்போது உறுதி செய்துள்ளார். இதனால் கவின் ஆர்மியினர் படுகுஷியில் காணப்படுகின்றனர்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.
இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மேடையில் பேசும்போது கவின் இடம் லொஸ்லியாவின் காதல் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
உடனே அனைவரும் எதிர்பார்க்காத பதிலை கவின் கூறியுள்ளார்.
எனக்கு சில கடமைகள் உள்ளது. அதனால் எனக்கு மற்றதை பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லை என்று கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
இதேவேளை, லொஸ்லியாவை விட ரசிகர்கள் தான் இவர்கள் இருவரும் சேர வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டார்கள்.
ஆனால், திடீரென்று கவின் பதிலை கேட்டு ரசிகர்கள் மனம் உடைந்து போயுள்ளார்கள். மேலும், லொஸ்லியா இது குறித்து இதுவரை மௌனம் காத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பிக் பாஸ் கொண்டாட்டம் தீபாவளியன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Kavin is in shooting…💃😍
Rise and Shine…❤️#KavinTimeToShine pic.twitter.com/etDRuhYF6P
— Tara💫 (@Tara_star11) October 20, 2019