12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்

0
219

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விஸ்வாசம். கடந்த பொங்கலுக்கு வெளியாகி இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட் திரைப்படமாக இது விளங்கியது.

இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைத்து தரப்பினரையும் கவர்ந்த இத்திரைப்படத்திற்கு அரசின் கல்வித்துறை வாயிலாகவே மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதாவது பன்னிரண்டாம் வகுப்பின் தமிழ் பாடப்புத்தகத்தில், உங்களுக்கு பிடித்த திரைப்படத்தின் இயக்குனருக்கு அதனை விமர்சனம் செய்து கடிதம் எழுதும்படி, ஒரு பகுதி இடம் பெற்று இருக்கிறது.
அதன் எடுத்துக்காட்டாக, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கிய சிவா அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

இதனை கண்ட அஜித் ரசிகர்கள் குறிப்பிட்ட பகுதியினை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here