தல அஜித் தற்போது ஒரு படம் ஒரு தயாரிப்பாளர் ஒரு இயக்குனர் என தேர்ந்தெடுப்பது இல்லை. உதாரணமாக சிறுத்தை சிவா அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். தயாரிப்பாளர் சத்யஜோதி தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டு படங்களை தயாரிக்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு கொடுத்தார்.
இயக்குனர் வினோத்திற்கு 2 படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்த அஜித் போனி கபூருக்கு அந்த 2 படங்களை தயாரிக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். இப்படி தொடர்ச்சியாக ஒரு கூட்டணியில் இணைந்து பணியாற்ற விரும்பும் தல அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த கூட்டணிகள் எல்லாம் உடைத்தெறிந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தர முன்வந்திருக்கிறார்.
அந்த வரிசையில் தலா 61 திரைப்படத்தை இயக்கும் போட்டியில் 4 இயக்குனர்கள் களமிறங்கியுள்ளனர்.
மாதவன் விஜய் சேதுபதியை வைத்து விக்ரம்வேதா என்கிற மிகப் பிரம்மாண்டமான வெற்றி திரைப்படத்தை எடுத்த புஷ்கர் காயத்ரி தல அஜித்தின் 61வது வது படத்துக்காக அவரிடம் கதை சொல்ல நேரம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மாதவன் விஜய் சேதுபதியை வைத்து விக்ரம்வேதா என்கிற மிகப் பிரம்மாண்டமான வெற்றி திரைப்படத்தை எடுத்த புஷ்கர் காயத்ரி தல அஜித்தின் 61வது வது படத்துக்காக அவரிடம் கதை சொல்ல நேரம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதேபோல தற்போதுள்ள இளம் இயக்குனர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனராக இருப்பவர் கார்த்திக் நரேன் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. துருவங்கள் பதினாறு என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் தற்போது அருண் விஜய் நடிக்கும் மாஃபியா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவரும் தல அஜித்தை சந்தித்து கதை சொல்ல நேரம் கேட்டிருக்கிறார்.
அதற்கடுத்ததாக மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஷ்வின் மற்றும் நேற்று இன்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோரும் தல அஜித்திற்காக காத்திருக்கின்றனர்.
இவர்களின் தல அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செய்து தெரிவியுங்கள் தொடர்ந்து செய்திகளை அறிய பாலோ செய்யுங்கள் மேலும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.