கோயிலுக்கு செல்லும் அனைவரும் தவறாது கோயில் சன்னதியை வளம் வருவது முக்கியமான அம்சமாகும். ஆனால் தமிழகத்தில் ஒரு சிவன் கோயிலில் மட்டும் சன்னதியை சுற்றிவர தடை உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. திருவையாறில் உள்ள ஐயாறப்பன் கோயிலில் தான் பக்தர்கள் சன்னதியை சுற்றிவர தடை உள்ளது. ஏன் இந்த தடை? மேலும் அந்த கோயிலில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.
திருக்கைலாய மலை சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திருக்கைலாயத்திற்கு சென்று வழிபடுவது எல்லோராலும் இயலாத காரியமாகும், அப்படிப்பட்டவர்கள் இந்த தளத்திற்கு சென்று ஈசனை வணங்கினால் ஈசனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
கிமு முதலாம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த கரிகால் பெருவளத்தான் என்ற சோழ பேரரசன் இமயவரம்பில் புலிக் கொடி பதித்து. வெற்றியுடன் நாடு திரும்பும் வழியில் ஐயாற்றை கடக்கும்பொழுது அவர் வந்த தேரின் சக்கரங்கள் பூமியில் புதைந்து நகர மறுத்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் தேர் கால்கள் நகராததால் ஏதோ ஒரு சக்தி ஈர்க்கிறது என்பதை உணர்ந்த கரிகாலன் அந்த இடத்தை தோண்ட ஆணையிட்டார். அந்த இடத்தை தோடிய போது அதன் அடியில் சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அதோடு நீண்ட சடைமுடியை கொண்ட நியமேசர் என்ற சித்தரும் தோன்றினார். அவரின் பாதம் பணிந்த சோழனுக்கு ஆசி வழங்கிய நியமேச முனிவர் தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பி வழிபடுமாறு கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட சோழ மன்னன் மிகச் சிறப்பான வகையில் கோயில் கட்டினார். கரிகால் சோழனுக்கு சிவபெருமானே சித்தரின் வடிவில் வந்து சுயம்பு லிங்கத்தை காட்டி கோயில் கட்ட செய்தார் என்று மக்களால் நம்பப்படுகிறது.
இந்த கோயிலின் கருவறைக்கு பின்புறம் சிவப்பெருமானின் ஜடாமுடி பரந்து விரிந்து இருப்பதாக ஐதீகம். எனவே சிவபெருமானின் ஜடாமுடியை யாரும் மிதித்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக இந்த கோயிலில் சன்னதியை சுற்றிவர தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இத்திருத்தலத்தின் வெளிபிரகாரத்தில் ஒரு இடத்தில் நின்று ஐயாறப்பா என்று குரல் கொடுத்தால் அது ஏழு முறை திரும்பி கேட்கும் அளவிற்கு இந்த கோயிலின் கட்டிடக்கலை நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சத்தம் கேட்கும் அதிசயத்தை ஆய்வு செய்ய வெளிநாட்டில் இருந்து பல கட்டடக்கலை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தும் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்பது இந்த கோயில் இருக்கும் பேரதிசயமாகும்.