பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை விட மக்களால் அதிகமாக வெறுப்பினை சம்பாதித்தவர் என்றால் அது மீரா மிதுன் தான். சேரனை தவறாக குற்றம் சாட்டி அசிங்கப்படுத்த நினைத்த மீரா மிதுனுக்கு கமல் அருமையான குறும்படம் போட்டுக் காட்டினார். ஆனாலும் மீண்டும் சேரன் மீதே தவறு இருப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மீரா மிதுனின் வெளியேற்றத்தின் போது பார்வையாளர்கள் பயங்கர மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
இந்த சீசனில் வனிதாவை விட அதிகமாக வெறுக்கப்பட்டவர் என்றால் அது இவர் தான். தற்போது இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் மீரா மிதுன் வெளியே வேறொரு சதிதிட்டத்தினை தீட்டியுள்ளதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த ஆடியோவில் மீரா மிதுன் தனது நண்பரிடம் நானும், முகேனும் நெருக்கமாக இருக்கும் காட்சியினை தயார் செய்யும் என்றும் இந்த வேலையை முடித்த பின்னர் பேசிய பணத்தினை தருகிறேன் என்று கூறியுள்ளார். இன்று உள்ளே சென்ற மீரா மிதுனின் இப்படியொரு ஆடியோ வைரலாக பரவி வருவதையடுத்து பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.