தொழில் நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டே செல்கிறதோ, அந்த அளவிற்கு ஆபத்துகளும் வளர்ந்து கொண்டே செல்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
இவரது கம்ப்யூட்டரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை டவுண்லோடு செய்து பார்த்தார் அந்த இளைஞர் அதிர்சியில் உரைந்தார். அந்த காட்சியில் படுக்கை அறையில் தனது மனைவி உடை மாற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.
உடனே மனைவியை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், யாரே ரகசியமாக வீடியோ எடுத்திருக்கலாம் என கூறி கதறி அழுதுள்ளார். மனைவிக்கு ஆறுதல் கூறிய கணவன் வெளிநாட்டில் இருந்தபடியே கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் படங்கள் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதை கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் கேரள சைபர் கிரைம் போலீசார் ஆராய்ந்தனர். அப்போது படங்கள் அனைத்தும் அந்த இளைஞரின் வீட்டில் இருந்தே பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பெண்ணின் படுக்கை அறையில் இருந்த ஸ்மார்ட் டி.வி.யை பரிசோதித்து பார்த்த போது, அந்த பெண், தனது கணவருடன் ஸ்கைப்பில் சேட்டிங் செய்துவிட்டு ஆன்லைன் கேமிராவை ஆஃப் செய்யாதது தெரியவந்துள்ளது.
இரவு நேரத்தில் கணவருடன் ஸ்கைப்பில் பேசிய பின்பு ஸ்மார்ட் டி.வி.யின் கேமிராவை ஆஃப் செய்யாமல், ஸ்மார்ட் டி.வி. முன்பே அந்த பெண் உடை மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் ஸ்மார்ட் டி.வி. கேமிராவில் பதிவாகி அப்படியே வெளிநாட்டில் இருக்கும் கணவரின் கம்ப்யூட்டரில், டவுண்லோடு ஆகி உள்ளது.
நடந்த தவறை எடுத்துக் கூறிய சைபர் கிரைம் போலீசார் மற்றும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் ஸ்மார்ட் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதன் செயல்பாட்டை எப்படி நிறுத்த வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினர். 21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்த நிலையில் இதுபோன்ற ஆபத்துகளும் உள்ளது என்பதை நாம் அறிந்து தொழில்நுட்பத்தின் நுணுக்கத்தை கவனமாக கையாள வேண்டும்.