பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. அப்படியிருக்க கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிப்பெறுவது தர்ஷன் தான் என கூறி வருகின்றனர். ஏற்கனவே முகென் பைனல் சென்றுவிட்டார், இன்று சாண்டியும் பைனல் செல்ல, அடுத்து தர்ஷன் சென்றுவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால், டுவிட்டரில் தர்ஷன் எலிமினேட் ஆனதாக ஒரு தகவல் பரவ, தர்ஷன் இந்தியளவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். மேலும், பலரும் தர்ஷன் கண்டிப்பாக வெளியேறிவிட்டார், இது சாத்தியமே இல்லை என்று டுவிட்டரில் புலம்பி வருகின்றனர். இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இன்றைய நிகழ்ச்சியை பொறுத்திருந்து பார்ப்போம்.