சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை திரை விமர்சனம்!

குடும்பங்கள் பார்க்கும் கதைகள் வருவது அதிகமாகி வருகிறது. வருட ஆரம்பத்தில் வந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அண்ணன்-தங்கை செட்டிமென்ட்டை வைத்து இப்போது தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

ஆனால், அவருக்கு அப்பா இல்லை என்பதால் மற்ற அனைவருமே அவரை குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதில்லை, சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா ராஜேஸையும் சேர்த்து.

தங்கைக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ஊர் முழுவதும் அழைக்கிறார். ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத போது நட்டி அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்.

ஆனால், அவர் முன்வருவது சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே இருக்கும் ஒரு பகைக்காக தான், அது தெரியாமல் தங்கையை கட்டிக்கொடுக்க, அதன் பின் அவர் சிவகார்த்திகேயனை மதிக்காமல் இருக்க, பதிலுக்கு சிவகார்த்திகேயன் தங்கைக்காக இறங்கி போக, கடைசியில் என்ன ஆனது என்ற பாசப் போராட்டமே இந்த நம்ம வீட்டுப் பிள்ளை.

சிவகார்த்திகேயன் இது தான் சார் உங்க ரூட்டு என்று சொல்லும் அளவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார். எப்போது வீட்டிற்கு அடங்காத பையனாக பெண்களை சுற்றி வரும் சிவகார்த்திகேயன், இதில் பொறுப்பான பையனாக, அண்ணனாக, மச்சானாக என ரவுண்ட் கட்டி அடிக்கின்றார். அதிலும் கிளைமேக்ஸ் எமோஷ்னல் காட்சிகள் அவர் சொந்த வாழ்க்கை அனுபவத்தையும் சிறிது தட்டிவிட ஆடியன்ஸ் கண்களை குளமாக்குகின்றார்.

ஐஸ்வர்யா ராஜேஸ் கண்டிப்பாக எந்த ஒரு ஹீரோயினும் பீக்கில் இருக்கும் போது முன்னணி ஹீரோவிற்கு தங்கையாக நடிப்பாரா என்றால் கேள்விக்குறி தான். ஆனால், அதையும் நடித்து அசத்தியுள்ளார், இதோடு பாரதிராஜா, அர்ச்சனா, சூரி, வேலாராமமூர்த்தி, சுப்பு, நட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே தங்கள் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

பாண்டிராஜ் படம் என்றாலே ஒரு சில கதாபாத்திரம் போகிற போக்கில் நல்லது செய்துவிட்டு செல்லும். அதுவும் க்ளிக் ஆகும், அந்த கதாபாத்திரத்தை இதில் சூரியின் மகனாக வரும் பாண்டிராஜின் ரியல் லைப் மகன் செய்கின்றார். முந்திரிகுட்டை என்ற கதாபாத்திரத்தில் அவர் அடிக்கும் கவுண்டர் வசனத்திற்கு ஒரு சில இடங்களில் சூரி வசனத்தை விட க்ளாப்ஸ் அள்ளுகிறது.

எப்படியும் இவர் படம் என்றாலே செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், இந்த படத்தில் செண்டி…மெண்ட்ட்ட் காட்சிகள் படம் முழுவதுமே உள்ளது, குறைந்தது 5 இடத்திலாவது அழ வைத்துவிடுவார், அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் இன்னுமா என்று இரண்டாம் பாதியில் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது.

ஏனெனில் சமுத்திரம் போன்ற படங்களில் பார்த்த கதை போலவே உள்ளதால், அட இது தான் நடக்கபோகிறது என்று யூகித்துக்கொள்ளும் திரைக்கதை. அதிலும் முடிந்த அளவிற்கு இன்றைய ட்ரெண்ட் ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்ததே பாண்டிராஜின் மிகப்பெரிய வெற்றி.

படத்தில் மிகவும் தள்ளி நிற்பது, அனு இமானுவெல் கதாபாத்திரம் தான், படத்திற்கும் அவருக்கும் எந்த ஒரு விதத்திலும் தொடர்பு இல்லை. ஏதோ பாடலுக்காக சேர்த்தது போல் தான் உள்ளது, அந்த காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பல பகுதிகளை மிக அழகாக அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார். டி.இமானும் தன் பங்கிற்கு கிராமிய இசை மற்றும் அவருடைய டெம்ப்ளேட் சில இசைகளை சேர்த்து ஸ்கோர் செய்துவிட்டார்.

படத்தின் நீளம், நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் என பல இருந்தும் எங்கும் பெரிய அளவிற்கு போர் அடிக்காமல் கொண்டு சென்றது.

பாண்டிராஜ் படம் என்றாலே வசனம் மிக முக்கியமாக பேசப்படும், அப்படி குடும்ப உறவுகள் குறித்த வசனங்கள் இதிலும் ரசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டுப்பிள்ளை, சிவகார்த்திகேயனின் மாஸ் கம்பேக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*