வரலாற்று காலம் முதல் இன்றுவரை மனித இனம் படும் துயரத்தில் பெருந்துயரம் கடன் பிரச்சனை தான். கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று இராணவனின் துயரத்தை கடன் பட்டவர்களின் துயரத்தோடு ஒப்பிட்டு கம்பராமாயணத்தில் சொல்லியிருப்பார் கம்பர். இப்படிப்பட்ட கடன் சுமையிலிருந்து நம்மை காப்பாற்றும் சக்தி நமது குலதெய்வத்திற்கு இருக்கிறது.
ஒவ்வொருவரின் வாழ்விலும் குலதெய்வத்தின் துணையிருந்தால் எப்படிப்பட்ட கஷ்டத்திலிருந்தும் மீண்டு வரலாம். குல தெய்வத்தில் அருள் இருந்தால் நம் வாழ்வில் எல்லாவிதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருமுறையாவது தவறாமல் குலதேவத்தில் கோயிலுக்கு சென்று அவரவர் குல வழக்கப்படி பொங்கல் வைத்து வந்தால் மேன்மை ஏற்படும்.
கஷ்டத்தில் பெருங்கஷ்டமான கடன் தொல்லையிலிருந்து விரைவில் மீள ஐந்து பௌர்ணமி தொடர்ந்து குல தெய்வத்தில் கோயிலுக்கு சென்று சாமிக்கு பட்டு வஸ்திரம், அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வந்தால் எப்படிப்பட்ட கடனையும் அடைக்கும் வழியை குலதெய்வம் அருள்வார்.
பெரும்பாலானோருக்கு குலதெய்வத்தின் கோயில் வெகு தொலையில் இருப்பதால் தொடர்ந்து ஐந்து பவுர்ணமிகள் செல்லமுடியாமல் இருக்கலாம் அவர்கள் குலதெய்வத்தின் படத்தை பூஜை அறையில் வைத்து படத்தின் முன் ஐந்து முக குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்றி அவரவர் குடும்ப வழக்கப்படி பொங்கல் வைத்து குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி தீபம் காட்டி வழிபட வேண்டும். குலதெய்வத்தின் படம் இல்லாதவர்கள் மஞ்சலில் பிள்ளையார் பிடித்து வைத்து குலதெய்வமாக கருதி இந்த வழிபாட்டை செய்யலாம். உங்களின் கடன் பிரச்சனை மட்டுமல்லாது உங்களின் வாழ்வின் பல்வேறு வளங்களும் பெற்று செழிப்போடு வாழலாம்.