எனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா? பதிலளித்த காஜல்!

0
430

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த போட்டியாளராக வலம் வரும் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக உலவி வரும் சர்ச்சைக்கு காஜல் பசுபதி பதிலளித்துள்ளார்.

இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தனது நகைச்சுவையால் மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடன இயக்குநர் சாண்டி.

ஆரம்பகாலகட்டத்தில் பல்வேறு டிவி நகழ்ச்சிகள் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சாண்டிக்கும் பிக்பாஸ் 2 போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்த சாண்டிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் காஜல் பசுபதிக்கும் சாண்டிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அதை அவர் மறைத்து விட்டதாகவும் சமூகவலைதளவாசிகள் சர்ச்சையைக் கிளப்பி விட்டனர்.

இதற்கு பதிலளித்திருக்கும் காஜல், “எனக்கு சாண்டியுடன் திருமணமாகி பின் பின் விவாகரத்தானது. ஆனால் குழந்தைகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மை கிடையாது. அந்தக் குழந்தைகள் என்னுடைய உறவினரது குழந்தைகள்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here