கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்!

கடன் இல்லாத மனிதனே இல்லை என்ற அளவிற்கு இன்றைய மனித இனத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக கடன் பிரச்சனை இருந்துவருகிறது. இந்த கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வர நாம் செய்யவேண்டிய ஐந்து எளிமையான பரிகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

கடன் பிரச்சனையில் சிக்கியவர்களுக்கு தான் தெரியும் கடன் மேலும் மேலும் கடனையே உருவாக்கும். ஒருமுறை கடன் சிக்கலில் சிக்கியவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் மன வேதனையில் தவித்து வருவார்கள். நாங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த ஐந்து பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் செய்து வாருங்கள் உங்கள் கடன் தீருவது நிச்சயம்.

நீங்கள் தினமும் செய்யவேண்டிய பரிகாரங்கள்.

1. நீங்கள் வீட்டில் செய்யும் சாப்பாட்டில் கொஞ்சம் அதிகமாக செய்து உங்களால் முடிந்த ஓரிருவருக்கு அண்ணதானம் ஐந்து நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.

2. வெள்ளத்தால் பாயாசம் செய்து கொமாதாவிற்கு ஐந்து நாட்கள் உங்கள் கையால் வழங்க வேண்டும். குறிப்பாக கடன் யார் வாங்கினாரோ அவர் கைகளால் தருவது நல்லது.

3. வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவி சன்னதிக்கு சென்று மல்லிகளை பூ சாற்றி பூஜை செய்து வரவேண்டும்.

4. வியாழக்கிழமை அன்று குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமை அம்பாள் சன்னதியில் தரவேண்டும். அம்பாளின் பாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்து பெற்றுவந்து வீட்டில் வைத்து அடுத்த வெள்ளிக்கிழமை வரை பூஜை செய்ய வேண்டும் இப்படி பதினொரு வாரங்கள் செய்துவரவேண்டும் ஒவ்வொரு வாரம் பெற்றுவரும் எலுமிச்சை பழங்களை சேர்த்து வைத்து பதினொரு வார பூஜை முடிவில் கடலிலோ அல்லது ஓடும் நீரிலோ விட்டுவிட வேண்டும். இதில் எந்த தடையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. கொஞ்சம் கோதுமையில் ஆறு துளசி இல்லை மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைத்து அதை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் கடன் தீருவதை கண்கூடாக பார்க்கலாம்.

நீங்கள் இந்த ஐந்து பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வாருங்கள் உங்கள் கடன் சூரியனை கண்ட பனி போல விலகுவதை கண்கூடாக காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*